16424 நரி சொன்ன ‘யுரேகா”: சிறுவர் எழுதிய சிறுவர் கதைகள்.

இ.சு.முரளிதரன், க.பரணிதரன் (தொகுப்பாசிரியர்கள்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்ச் 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

iv, 36 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-41-3.

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த 25 மாணவர்களின் கதைகள் தொகுப்பாக வெளிவருகின்றன. நிறம் மாறிய எலி (ஜெ.லிவியானா-தரம் 5), முதலில் உணவு (ஜெ.யஸ்மிகா-தரம் 8, நேர்மை (பி.தாரணி-தரம் 9), நிலா (ர.கஜதாரணி-தரம் 10),  மூங்கிலைப் போல் வாழ் (பி.ஜனனி-தரம் 6), நம்பிக்கை (தே.பவீந்திரன்-தரம் 9), பூமியின் எதிர்காலம் (த.தேனுகன்-தரம் 8), பெண் சிங்கம் (மு.மேதினிகா- தரம் 10), கடவுளும் டைனோசரும் (க.கைலாஷ்-தரம் 7), முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் (பி.பிரகாஷினி-தரம் 7), தர்மம் (வி.நிவிந்தன்-தரம் 9), பொறுமை (த.அக்ஷிகா- தரம் 7), நன்மையே செய்க (மு.திபிஜா-தரம் 7), நரி சொன்ன யூரேகா (பி.சுபாங்கி-தரம் 8), அனுபவமே வாழ்க்கை (வி.அபிஷா-தரம் 10), பாதுகாப்பு (சு.திவ்வியன்-தரம் 8), நட்பின் பரிசு (மு.கோகனன்-தரம் 7), தீக்குச்சிகளின் உரையாடல் (ஜெ.ஜெயசுவேதா-தரம் 7), சேரும் இடம் (நா.டுகிந்தன்-தரம் 9), வண்ணத்துப்பூச்சியும் வெட்டுக்கிளியும் (அ.அஜிதன்-தரம் 5), பொன் வண்டு (ச.சாகித்தியானந்-தரம் 8), விளக்குமாற்றின் விளக்கம் (ச.சௌமியா-தரம் 9), உண்மையே வெல்லும் (த.நிருபனா-தரம் 10), அரை உயிர்கள் (க.கவிந்தியா-தரம்10), இரண்டு மைனாக்கள் (அ.கவிஷ்-தரம் 9) ஆகிய கதைகள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. 221 ஆவது ஜீவநதி வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Paysafecard Sichere Zahlungsmethode

Content Anmeldung Im Verbunden Kasino Inoffizieller mitarbeiter Sonnennächster planet Verbunden Spielbank Paysafecard Vorteil Blackjack Aufführen Bei Unterwegs Wie gleichfalls Finde Selbst Tagesordnungspunkt Echtgeld Casinos? Bei

14050 திருச்சபை வரலாற்றுத் துளிகள்.

சா.பி.கிருபானந்தன். யாழ்ப்பாணம்: தூய பிரான்சிஸ்கு சவேரியார் குருத்துவக் கல்லூரி, கொழும்புத்துறை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2007. (கொழும்பு: கத்தோலிக்க அச்சகம்). (30), 122 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 29.5×21 சமீ. ஈழத்