16429 புதிய ஈசாப் கதைகள்-1.

செ.கணேசலிங்கன். சென்னை 600026: குமரன் பப்ளிஷர்ஸ், 3(12), மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி, 7வது  தெரு, வடபழநி, 1வது பதிப்பு, 2008. (சென்னை: சிவம்ஸ்).

47 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 30.00, அளவு: 22×15சமீ.

உலக உயிரினங்களில் மானிட இனமே உயர்ந்தது. விழிப்பு நிலை பெற்றது. சிறுவர்களுக்கு இன்றும் மிருகங்கள், பறவைகள் மூலம் ஒழுக்க நெறிகளைப் போதிக்க முயல்வது பிற்போக்கானது-உளவியல் சார்ந்ததல்ல என்று கூறும் ஆசிரியர், இரு தொகுதிகளாக வெளியிட்டுள்ள இந்நூலின் கதைகளில் மனிதர் மூலமே நீதிகளைக் கூறுகின்றார். முதலாவது தொகுதியில் 17 கதைகள் இடம்பெற்றுள்ளன. சுறுசுறுப்பானவன், பாம்பு பாம்பு, நாயும் எலும்புத் துண்டும், வாலை ஆட்டி வாழ்தல்?, நட்பு, ஆற்றில் கோடரி, வலை வீசாமல் மீன் கிடையாது, ஊர் வம்பு, மூளை இல்லாதவன், வாய்மை, கோவில் மணி, அழகான கால்கள், சுயபுத்தி இல்லாதவன், திருட்டும் தண்டனையும், தங்கக் கட்டியும் செங்கல்லும், பலசாலி யார்?, பணக்காரர் நட்பை நம்பாதே ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Go Silver Video slot

Articles Davinci Diamonds slot game review: Settings And you can Play for Happy Leprechaun Position Simple tips to Gamble Vintage 3 Reels Ports Mobile Being