செ.கணேசலிங்கன். சென்னை 600026: குமரன் பப்ளிஷர்ஸ், 3(12), மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி, 7வது தெரு, வடபழநி, 1வது பதிப்பு, 2008. (சென்னை: சிவம்ஸ்).
45 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 30.00, அளவு: 22×15 சமீ.
ஈசாப் கதைகள் புகழ்பெற்றவை. கிரேக்க அடிமையான ஈசாப் என்பவரால் கி.மு.ஆறாம் நூற்றாண்டில் கூறப்பட்டவை. இரு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ள இந்நூலின் இரண்டாவது தொகுதியில் 17 கதைகள் இடம்பெற்றுள்ளன. பகுத்தறிவு, மதில் மேல் மாலதி, குரங்காட்டி மனிதன், குற்றம் குற்றம் தான், பறவையும் மிருகமும், புறங்கூறல் கூடாது, நாணயமும் தொழிலும், வாய்ச்சொல்லில் வீரன், கலங்கிய தண்ணீரும் கண்ணீரும், அடிமை நாய், முதுமைக் காலம், பலவான் பலராமன், எட்டாத பழம் புளிக்கும், உழைப்பும் பயனும், திருட்டுத் திருட்டுத் தான், பசுமைப் பாதுகாப்பு, ஏமாற்றாதே ஏமாறாதே ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.