செ.அன்புராசா. மன்னார்: முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றம், முருங்கன், 1வது பதிப்பு, மார்கழி 2020. (அச்சக விபரம் தரப்படவில்லை).
16 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 350., அளவு: 14.5×21 சமீ., ISBN: 978-955-4609-13-6.
சிறுவர்கள் காலம் காலமாக வாசித்துவந்த ஆமையும் முயலும் கதையை மறுவாசிப்புக்கு உட்படுத்தி இக்கதை எழுதப்பட்டுள்ளது. ஆமையை விட முயல் கெட்டித்தனமானது அல்லது ஆமையிடம் முயல் தோற்றுப்போனது போன்ற பார்வையில், மாற்றம் வேண்டும் என்பதை உணர்ந்து ஆமையும் முயலும் தனித்துவமான ஆற்றல்களை உடையன என்பதை நமது சிறார்கள் கண்டுகொள்ள வேண்டும் என்ற கருத்தை ஆசிரியர் இக்கதை வழியாக புரியவைக்கின்றார். ஓவியர் டொமினிக் ஜீவாவின் வண்ண ஓவியங்கள் பக்கங்கள் தோறும் சிறுவர்களை மகிழ்விக்கின்றன.