16433 சிந்துவின் தைப்பொங்கல் (Sinthu’s Thai Pongal).

சிவகாமி, ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா. கனடா: ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா, 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(40) பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×20.5 சமீ., ISBN: 978-0-9738750-5-8.

இச்சிறுவர் இலக்கியம் கனடாவில் வாழும் ஒரு புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பத்தின் பார்வையில் தமிழரின் கொண்டாட்டங்களில் ஒன்றான தைப்பொங்கல் பற்றிக் கூறுகின்றது. தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் ஒவ்வொரு பக்கமும் வண்ணச் சித்திரங்களுடன் கூறப்படுகின்றது. கனடாவில் பிறந்து வளர்ந்த சிந்து, யாழ்ப்பாணத்தில் தாத்தா, பாட்டியுடன் தைப்பொங்கலைக் கொண்டாடுகிறாள். சித்திரங்களை வே.ஜீவானந்தன் வரைந்துள்ளார். புலம்பெயர் வாழ்க்கை, குடும்பம்,  பாரம்பரியம் என்பவற்றின் யதார்த்தத்தை இது தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. எம்மை நிலை நிறுத்தும் இருமுகத் தன்மை, வருடாந்த அறுவடை மற்றும் குடும்பத்தவரிடையே காணப்படும் அன்பு ஆகியவற்றை இந்தக் கதை கொண்டாடுகின்றது. ஒக்டோபர் மாதத்தில் வரும் நன்றி நவிலல் (Thanks Giving) நாளைப்போல ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் தமிழ் மாதங்களின் முதலாம் மாதமான தை மாதத்தின் முதலாம் நாளில் தைப்பொங்கல் கொண்டாடப்படுவதை இந்நூல் கதையினூடாக விளக்குகின்றது.

ஏனைய பதிவுகள்

Casino Inte med Konto 2024

Content Ser | Instant Banking Genast Banköverföring Casinobonusar Därför att Utpröva Gratis Kant Mig Prova Kungen Norska Och Tyska Casinon Inte med Svensk perso Licens?