16440 கண்ணனும் தாத்தாவும்.

முத்து (இயற்பெயர்: திருமதி தவமணி மனோகரன்). லண்டன்: திருமதி தவமணி மனோகரன், 1வது பதிப்பு, ஜீலை 2022. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்).

viii, 157 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×18 சமீ.

”கண்ணனும் தாத்தாவும்” என்ற தலைப்பில் தாத்தா பேரனுக்குச் சமயக் கருத்துகள், தேவார திருமுறைகள், தமிழர் தம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியவை மற்றும் நீதி நெறிகள் யாவையும் கூறி மகிழ்ந்து பேரனையும் மகிழ வைப்பதாக எழுதப்பட்ட உரையாடல்கள் இவை. லண்டனில் வெளிவரும் ”கலசம்” ஆன்மீக இதழில் இத்தொடர் முன்னர் பிரசுரமாகியிருந்தது. அதன் நூல்வடிவம் இதுவாகும். திருமதி தவமணி மனோகரன் இணுவில் தெற்கை பிறப்பிடமாகக் கொண்டவர். பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப் பட்டதாரியான இவர், திருக்கோணமலை, யாழ்ப்பாணக் கச்சேரிகளில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி திருமணத்தின் பின்னர் லண்டனுக்குப் புலம்பெயர்ந்தவர். அங்கு திருவள்ளுவர் தமிழ்ப் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

ஏனைய பதிவுகள்

17384 தமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்.

பால சிவகடாட்சம். திருக்கோணமலை: வானவில் வெளியீடு, 1வது பதிப்பு, 2006. (திருக்கோணமலை: ரெயின்போ மினிலாப், 361, நீதிமன்ற வீதி). 280 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 955-1098-00-2. ‘தமிழர்