16442 தமிழ் இலக்கியம் 10-11ஆம் ஆண்டு.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுறுபாய, பத்தரமுல்ல, 13வது பதிப்பு, 1998, 1வது பதிப்பு, 1986. (இரத்மலானை: சர்வோதய விஸ்வலேகா அச்சகம், இல.41, லும்பினி அவெனியூ).

vii, 171 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

10ஆம் 11ஆம் ஆண்டு மாணவர்களுக்கான இந்நூலில் ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் வினாக்கள் சேர்க்கப்பட்டு மறுபதிப்புச் செய்யப்பட்டள்ளது. புகழ்பெற்றபுலவர்களும் எழுத்தாளர்களும் ஆக்கியுள்ள செய்யுள்களிலும் உரைநடைகளிலுமிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. கம்பராமாயணக் காட்சிகள் (அவையடக்கம், சிறப்புப் பாயிரம், கம்பன் அபர பிரமன், ஆறு, குலஞ் சுரக்கும் ஒழுக்கம்), நளவெண்பா (சுயம்வர காண்டம்), இஸ்லாமியக் கலையும் பண்பும், நாலடியார், மாதரும் மலர்ப் பொய்கையும், ஆசாரக் கோவை, சிரிக்கத் தெரிந்த பாரசீகர், பெரிய புராணம், கர்ணனும் கும்பகர்ணனும், இலங்கை வளம், கலையின் விளக்கம், சீறாப்புராணம்-நபி அவதாரப் படலம், நீதிக்கும் பின் பாசம், கங்கையில் விடுத்த ஓலை, ஒன்றுக்கு ஆயிரம் ஆயிரம், செய்னம்பு நாச்சியார் மான்மியம், நன்றிப் பெருக்கு ஆகிய 17 பாடங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

16076 கணபதி பூஜா மந்த்ர கோஷம்.

கோப்பாய் சிவம் (இயற்பெயர்: பிரம்மஸ்ரீ ப.சிவானந்த சர்மா). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், ஸ்ரீ நகரம், அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம், மீள் பதிப்பு, ஜீலை 2020, 1வது பதிப்பு, மே 2020. (சுன்னாகம்:

15181 ஈழத்தமிழர் அரசியல் வரலாறு: 1883 தெடக்கம் 1968 வரை: சுருக்கக் குறிப்புகள் (பாகம் 1).

சி.அ.யோதிலிங்கம். யாழ்ப்பாணம்: அரசியல் சிந்தனை நூல் வரிசை, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை). 75 பக்கம், விலை: ரூபா 100.00,