கீதா கணேஷ். யாழ்ப்பாணம்: திருமதி கணேஷ் லோககீதா, சிற்பனை, வேலணை மேற்கு, 1வது பதிப்பு, தை 2018. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, கு.டு. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
vi, 272 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20×14.5 சமீ., ISBN: 955-705-141-4. இந்நூலில் தரம் ஒன்பதிற்குரிய புதிய பாடத்திட்டம்-2018 இற்கு அமைவாக பாட அலகு விளக்கங்களுடனும்; பயிற்சிகள் விடைகளுடனும் ஆக்கத்திறன் செயற்பாடுகள் மொழிவளம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து 21 அலகுகளில் இடம்பெற்றுள்ளன. நல்லெண்ணங்களைத் தேர்ந்தெடுப்போம், உண்மைக்குப் பரிசு, ஒரு சின்னஞ்சிறு பூச்சி, இதயம் அழுகிறது, மருமகனுக்கு விருந்து, யார் சிறந்தவர், மலைநாட்டுப் பிரயாணம், இனியவை கூறல், வியக்கும் மனம் வேண்டும், செய்யும் தொழிலே தெய்வம், செய்யுளை மனனஞ் செய்யும் வழி, எறும்புக் குடும்பம், தந்தை மகளுக்கு எழுதிய புகழ்பெற்ற கடிதம், வான்குருவியின் கூடு, நளவெண்பா, சகுந்தலை நாடகம், தோற்றுப்பார், நகரத்தின் நிழல், காட்டுவழி, சகுந்தலை நாடகம்-2, பிசிராந்தையார் கண்ட சமுதாயக் காட்சி ஆகிய 21 அலகுகளும் அவற்றைத் தொடர்ந்து மொழி வளம், விடைகள் ஆகிய இரு பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. திருமதி லோககீதா கணேஷ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்று இளங்கலைமாணிப் பட்டத்தையும், பேராதனைப் பல்கலைக் கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வியையும் பயின்றவர். தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ்மொழித்துறை விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார்.