16444 மகாபாரதம் ஆரணிய பருவம்: அருச்சுனன் றவநிலைச்சருக்கம் (உரையுடன்).

ஸ்ரீ வில்லிபுத்தூராழ்வார். சுன்னாகம்: வட இலங்கை தமிழ்நூற் பதிப்பகம், 1வது பதிப்பு, 1942. (அச்சக விபரம் தரப்படவில்லை).

v, (3), 135 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×13 சமீ.

1943 ஆங்கில எஸ்.எஸ்.சி. பரீட்சைக்குரியது. நூலாசிரியர் வரலாறு, மகா பாரதச் சுருக்கம், முன் சரித்திரச் சுருக்கம், அருச்சுனன் றவநிலைச் சருக்கச் சுருக்கம், அருச்சுனன் றவநிலைச் சருக்கம் (செய்யுள்), மேற்படி உரை ஆகிய ஆறு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. வைஷ்ணவ சமயத்தைச் சார்ந்த ஸ்ரீ வில்லிபுத்தூராழ்வார், திருமுனைப்பாடி நாட்டிலுள்ள சனியூர் என்ற கிராமத்தில் கி.பி. 1450-1471 காலகட்டத்தில் அவதரித்தவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 0324).

ஏனைய பதிவுகள்

11177 சிதம்பர சுப்பிரமணியன் பன்னீராண்டு நினைவு மலர்.

செ.தனபாலசிங்கன் (தொகுப்பாசிரியர்). உரும்பிராய்: சிதம்பர சுப்பிரமணிய சுவாமி கோயில் செயற்குழுவினர், 1வது பதிப்பு, 1964. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்). (16), 78 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ. இம்மலரில், வாய்மூடிக்கொண்டிருக்கட்டும்

16980 ஈழம் அரங்கு-மௌனகுரு (கட்டுரைகளும் நேர்காணல்களும்).

கி.பார்த்திபராஜா (தொகுப்பாசிரியர்). திருப்பத்தூர் மாவட்டம் 635 851: பரிதி பதிப்பகம், 56சீ, 128, பாரத கோயில் அரகில், ஜோலார்பேட்டை, 1வது பதிப்பு, ஜனவரி 2022. (சென்னை: துர்க்கா பிரின்டர்ஸ்). 68 பக்கம், விலை: இந்திய