16446 ஸ்ரீ வில்லி பாரதம் : புட்ப யாத்திரைச் சருக்கம்- மூலமும் உரைக்குறிப்புகளும்.

கா.தம்பையா. சாவகச்சேரி: பண்டிதர் கா.தம்பையா, ஸ்ரீபாரதி புத்தகசாலை, 1வது பதிப்பு, 1948. (யாழ்ப்பாணம்: அர்ச். பிலோமினா அச்சியந்திரசாலை, 102, பெரிய தெரு).

viii, 99 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ.

மகா பாரதக் கதையில் ஒரு பகுதி இது. ஒரு நாள் திரௌபதியின் முன்னால் வானிலிருந்து ஒரு மலர் விழுகின்றது. அவள் அம்மலரைக் கண்டு அதனை விரும்பி, அது போலொரு மலர் தனக்கு வேண்டுமென்றும் அதனைத் தேடிச்சென்று பெற்றுத் தரும்படியும் வீமனிடம் கேட்கிறாள். வீமன் முனிவரிடம் அம்மலர் பற்றி வினவி, அவர் சொற்படி குபேரபுரிக்கு இந்த புட்பத்தைத் தேடிப்பெற யாத்திரை போகின்றான். ”புட்ப யாத்திரை” சென்ற வீமன் தான் போகும் வழியிற் கதலி வனத்துக் காவலரை அழித்து, அப்பால் தன் அண்ணனான அநுமானைக் கண்டு, பின் நிகழும் போரில் அனுமக் கொடி பார்த்தற்பொருட்டு விஸ்வரூபம் கண்டு அவனருள் பெற்று, இயக்கனூர்ச் சோலையை அடைகின்றான். அங்கே காவல் செய்தோர் பலரையும், குபேரனால் அனுப்பப் பட்டோர் பலரையும் அதம் செய்து, குபேரனுடைய மகனாற் சமாதானப்படுத்தப்பட்டு தான் தேடி வந்த மலரைத் தருவுடன் பெற்று, தன்னைத் தேடி வந்த தருமனுடனும், கடோற்கஜனுடனும் மீண்டும் தன் இருப்பிடம் வந்து பாஞ்சாலி மகிழ மலர் நல்கி இருந்தான். இந்நூலில் இக்கதைப் பகுதிக்குரிய செய்யுட்பகுதியும் அதன் உரைக் குறிப்பும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 0318).

ஏனைய பதிவுகள்

Slots Gallery Casino

Content Hvordan Rangerer Gedit Online Casino Bonuser?: spilleautomat big bang online Fortell Ego, Hvilke Kasinoer Tilbyr De Beste Bonusene Uten Bidrag? 3) casinoet bak kampanjen