16447 இலக்கியம் : விசேட மலர் 2022.

ஸ்ரீ பிரசாந்தன், சு.முரளிதரன், எஸ்.தனுசாந்த், எஸ்.சிவநேசன் (ஆசிரியர் குழு). கொழும்பு: அரச இலக்கிய ஆலோசனைக் குழு, கலாசார அலுவல்கள் திணைக்களம்,  உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 10: பாஸ்ட் பிரின்டரி லிமிட்டெட், இல.165, தேவானம்பியதிஸ்ஸ மாவத்தை).

208 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5726-49-3.

2022ஆம் ஆண்டின் இலங்கை தேசிய சாகித்திய தின விழாவையொட்டி வெளியிடப்பட்ட விசேட மலர். இதில் உள்ள 18 இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளில் 13 சிங்களக் கட்டுரைகளும், மூன்று தமிழ்க் கட்டுரைகளும், இரு ஆங்கிலக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. ஆறுமுக நாவலரது பெரியபுராண வசனம் (ஸ்ரீ.பிரசாந்தன்), கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கை தமிழ் நாவல்களின் வருகையும் அங்கீகாரமும் (சு.முரளிதரன்), ஈழத்தில் நாட்டார் பாடல் தொகுப்பின் முன்னோடி முயற்சிகள் (க.இரகுபரன்) ஆகிய மூன்று கட்டுரைகள் தமிழ்மொழியில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

16114 இலண்டன் சைவ மாநாடு (பதினாறாவது) சிறப்புமலர்.

மலர் வெளியீட்டுக் குழு. இலண்டன் N 6 5BA : பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம், 200A, Archway Road, London 1வது பதிப்பு, ஏப்ரல் 2015. (இலண்டன்: ஜே.ஆர். பிரின்ட், 59-61, Hoe

12448 – அகில இலங்கை தமிழ்மொழித் தினம் 2001.

எஸ்.தில்லைநடராஜா (மலர்க் குழு சார்பாக). கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, உயர் கல்வி அமைச்சு, இணை வெளியீடு, கொழும்பு: கல்வித் திணைக்களம், மேல் மாகாணம், இசுருபாயா, பத்தரமுல்ல, 1வது பதிப்பு, 2001. (கொழும்பு 13: யூ.கே.