றஜனி நரேந்திரா (மலராசிரியர்). உடுவில்: வலிதெற்கு பிரதேச கலாசாரப் பேரவை, பிரதேசச் செயலகம், 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: முத்து பிரின்டர்ஸ், 122, காங்கேசன்துறை வீதி, சுன்னாகம்).
xiv, 130 பக்கம், ஒளிப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.
உடுவில் பிரதேசத்தின் தொன்மையான விடயங்களை இம்மலரிலே ஆவணப்படுத்துவதுடன், பல்வேறு அறிவியல்சார் பெரியோர்களின் கருத்துக்களை தொகுப்பதாகவும், வளர்ந்துவரும் எழுத்தாளருக்கு களம் அமைத்துத் தருவதாகவும் இம்மலர் அமைந்துள்ளது. மலராக்கக் குழுவில் மதுமதி வசந்தகுமார், றஜனி நரேந்திரா, எஸ்.தர்ப்பணா, ஐ.ஐ.அகல்யா, ம.ஜெயகாந்தன், செ.திருஞானகௌரி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இதில் ‘கட்டுரைகள்” (கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் இலக்கியவாதத்தின் போக்கு, உடல் உள ஆரோக்கியத்தைப் பேண உதவும் இந்து சமய நடைமுறைகள், பண்டைய தமிழர்களின் பண்பாடு, மறைந்துபோகும் மரபுவழி மரணச்சடங்கு, திருவாசகம் சுட்டும் இறை-ஆடல் சிறப்பு, பிடல் காஸ்ரோ எனும் மாமனிதன் வரலாறு பற்றிய பார்வை, சைவ சமய வழிபாட்டுடன் இணைந்து கைக்கொள்ளப்படும் சம்பிரதாயங்களில் பிரதேச ரீதியாக மாறுபடும் சில நடைமுறைகள் ஓர் அவதானிப்பு, வலிகாமம் தெற்குப் பிரதேச செயலர் பிரிவிலுள்ள இடப்பெயர்கள், நற்றமிழ் நண்ணிய நயத்தகு நக்கீரன், இணுவில் பொது நூலகம், இணுவிலின் கல்வி அபிவிருத்திக்கான அடித்தளம், மேலைத்தேய அறிஞர்களின் தமிழ்ப்பணி, ஓம் விழித்திடு-செயற்பாடு- வழிபாடு, தரைக்கீழ் நீரும் நீர் மாசாக்கமும், இணுவில் கிராமத்தின் நாடக வளர்ச்சி, பெண் விடுதலை நோக்கி, இந்துக்களது வாழ்வில் புருடார்த்தங்கள் செலுத்திய செல்வாக்கு, பாரம்பரியத்தில் சில பதிவு, கனிகொடுக்கும் தேசத்தை உருவாக்குவோம், உயிருக்கு ஆக்கம் அளிப்பது சமயம், ஆரோக்கிய ஆயுளுடன் வாழுவோம் வாரீர், வாழ்வின் வெற்றிப்படி, திருமணப் பொருத்தத்தில் செவ்வாய் தோஷம், கோபுர தரிசனம் கோடி புண்ணியம்), ‘சிறுகதைகள் (வித்தை விதைத்தவன், பொழுதொன்று புலராதோ?), கவிதைகள் (எங்கே செல்கிறோம், களைகள் களைக, நுளம்பால் குழம்பும் வாழ்வு, கனவொரு பாடம்) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் ஆக்கங்கள் வகுத்துத் தரப்பட்டுள்ளன.