16451 மருத முகிழ் 2022 (இதழ்10).

வீரசிங்கம் பிரதீபன் (மலராசிரியர்). வவுனியா: பிரதேச செயலகம், வவுனியா வடக்கு, 1வது பதிப்பு, 2022. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 85, கந்தசுவாமி கோவில் வீதி).

x, 248 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×16.5 சமீ., ISSN: 2345-9077.

வவுனியா வடக்கில் தமிழர்களின் இருப்பு, கல்வியில் மீண்டெழும் நெடுங்கேணிப் பிரதேசம், மாவட்டப் பொது நிர்வாகத்தின் கீழ் வவுனியா வடக்கு பிரதேச சபை, நெடுங்கேணி ஐயனாரும் நொச்சியடிக் கேணியும் ஒரு வரலாற்று ஆய்வு, வவுனியா வடக்கு பிரதேசத்தில் ஐயனார் வழிபாடு, வவுனியாவில் இன மத நல்லிணக்கத்தை நாடி ஒரு நீண்ட பயணம், நிலைபெறுதகு வழக்கு முறைகளைச் செப்பும் வவுனியா வடக்கு,

வவுனியா வடக்கில் இன்றும் நிலைத்திருக்கும் பாரம்பரியம், வவுனியா வடக்கின் வயற் பண்பாடு, வவுனியா வடக்கு பிரதேசத்தின் பாரம்பரிய உணவு முறைகள், வவுனியா வடக்கு பிரதேச நீரியல் வளம், வவுனியா வடக்கின் வாழ்வியல் சடங்குகள், வவுனியா வடக்கு பிரதேச வாழ் மக்களின் வாழ்வியலும் சுற்றுலாத்துறையும், வவுனியா வடக்குப் பிரதேசத்தின் கிராமியக் கலை வரலாறு, வவுனியா வடக்கு பிரதேசத்தில் வழங்கிவரும் நாட்டார் இலக்கியங்கள், பண்டாரவன்னியன் நடனம், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவக்குட்பட்ட பட்டிக்குடியிருப்பு, தொலைந்து போகும் வவுனியா வடக்கின் பூர்வீக கிராமங்கள், வவுனியா வடக்கின் அபிவிருத்தியில் தமிழ், சிங்கள உறவுகள், வன்னிவள நாட்டார் பாடல்களில் புலப்படும் வாழ்க்கைக் கோலங்கள், தமிழர் அழகியல் தத்துவ மரபு: தமிழர் சடங்குகளை முன்வைத்து, பறை இசைக் கலையும் அதன் இன்றைய நிலையும், நாம் மறந்தவையும் எம்மை விட்டு மறைந்தவையும், தமிழர் பண்பாட்டில் வாழை, நீங்கள் இன்றே தலைவராகுங்கள், புதுக் கவிதை, அலறிய கோவில் மணி: ஒரு சரித்திரம் கூறும் சிறுகதை, மதிமயக்கம் (சிறுகதை), தமிழில் வருடங்கள், ஊழிற் பெருவலி யாவுள (சிலப்பதிகாரத்தில் ஒரு காட்சி- நாடகம்), ஐயனார் சிந்து ஆகிய 31 படைப்பாக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

11183 அபிராமி நவநீதம்.

காளிதாசன் (இயற்பெயர்: க.வீரகத்தி). கரவெட்டி: க.வீரகத்தி, வாணி கலைக் கழகம், 2வது பதிப்பு, மார்ச் 1995, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1994. (கரவெட்டி: தமிழ்ப் பூங்கா அச்சகம், நெல்லியடி). 26 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

15786 புதுயுகம் மலர்கிறது: குறுநாவல்.

ம.நிரேஸ்குமார். பத்தரமுல்லை: கலாசார அலுவல்கள் திணைக்களம், 8ஆவது மாடி, செத்சிரிபாய, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (கொழும்பு 10: விஷ்வ பிரிண்டர்ஸ், இல. 534, மருதானை வீதி). (5), 38 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,