16455 அக்கினிச் சிறகாய்.

ரஜிதா அரிச்சந்திரன். யாழ்ப்பாணம்: ரஜிதா அரிச்சந்திரன், இல. 110, புதிய செங்குந்தா வீதி, திருநெல்வேலி கிழக்கு, 1வது பதிப்பு, மார்கழி 2021. (யாழ்ப்பாணம்: மெகா பதிப்பகம், 41, றக்கா வீதி, கச்சேரியடி).

xii, 104 பக்கம், விலை: ரூபா 300.00, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-98909-0-9.

கவிஞர் ரஜிதாவின் முதலாவது கவிதைத் தொகுப்பு. ‘இயற்கை, சமூகம், காதல், மனிதப் போராட்டங்கள், பண்பாடு, ஏக்கங்கள் என்பவற்றை பிரதிபலிக்கும் வகையில் பாரதியின் சிந்தனைக்கமைவாக ”சொல்புதிது சுவைபுதிது சோதிமிக்க நவகவிதை”  என்றதற்கிணங்க கவிபடைத்துத் தங்கள் முன் வைக்கின்றேன்” என்று அவர் முன்னுரையில் குறிப்பிடுகிறார். ரஜிதா தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம்- நல்லூர் காசிப்பிள்ளை வித்தியாலயத்திலும் உயர் கல்வியை யாழ் இந்து மகளிர் கல்லூரியிலும் கற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தினையும் முதுமாணிப் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டவர். இவரால் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் போட்டிகளில் சமர்ப்பித்து வெற்றியீட்டிய கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது

ஏனைய பதிவுகள்

Free online Harbors

Blogs Exactly what Online game Do you wish to Enjoy Most? Software Team When using really local casino bonuses, you will also have to adhere