16456 அகத்தி.

சௌந்தரி கணேசன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆவணி 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

vi, 7-126 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-64-0.

ஜீவநதியின் 83ஆவது வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது. கரவெட்டிப் பண்டிதர் பொன் கணேசனின் புதல்வியான சௌந்தரி புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார். அவுஸ்திரேலியாவின் தமிழ்ப் பாடசாலை ஆசிரியராகவும், தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார். நீர்த்திரை என்ற கவிதைத் தொகுதியைத் தொடர்ந்து அவரது இரண்டாவது வெளியீடாக இக்கவிதைத் தொகுதி வெளிவருகின்றது. எனக்காக, உங்களுக்காக, காதலுக்காக ஆகிய மூன்று பிரிவுகளில் இவரது கவிதைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்