16458 அகரம் எனது சிகரம்.

வள்ளியம்மை சுப்பிரமணியம். ஜேர்மனி: வளர்பிறை வெளியீட்டுக்குழு, திரு.திருமதி சின்னத்தம்பி பரமலிங்கம் குடும்பம், 1வது பதிப்பு, 2021. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

xxxiv, 145 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×15.5 சமீ.

யாழ்ப்பாண மாவட்டம், தென்மராட்சி, சாவகச்சேரி நகரில் வசிக்கும் முன்னைநாள் முன்பள்ளி முதன்மை ஆசிரியை திருமதி சுப்பிரமணியம் வள்ளியம்மை அவர்களின் கவிதைகளின் தொகுப்பு. இது கவிதை இலக்கணம் கடந்து தனது உள்ளத்தில் எழுந்த சொற்களால் இப்பாவடிவங்களைப் புனைந்துள்ளார். இதில் தமது குலதெய்வங்களையும், உற்றார் உறவினரையும், ஊர்ப் பெரியவர்களையும் நீளநினைத்து கவிதைகளைப் புனைந்துள்ளார். விநாயகப் பெருமானைப் பணிந்து தொழுதேத்தி நல்லூர்க் கந்தனுக்குரிய கவிதைகளோடு செல்வச்சந்நிதி முருகன், நயினை நாகபூஷணி அம்பாள், ஸ்கந்தபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆகிய தலங்களுக்குரிய பாடல்களையும் பதிவுசெய்கிறார். கொரோனா நோயினை மையமாக வைத்து ஒரு பக்திப் பாடலையும் இணைத்திருக்கிறார். இறைவனுக்கு அடுத்ததாகத் தன் பெற்றோரை நினைந்து கவிதை படைத்துள்ளார். வன்னிப் பேரவலத்தையும், பெற்றோரை இழந்த சிறுவர்களையும் நினைவுகூர்கிறார். மேலும் மக்களின் வாழ்க்கைத் தத்துவம், பத்திரிகைத்துறையின் முக்கியத்துவம் எனப் பல விடயங்களைத் தன் கவிதைகளுக்குள் கொண்டுவந்துள்ளார். உயிரெழுத்துக் கவிதை நயங்களில் அனைத்துக் கவிதைகளையும் உயிரெழுத்து அகரவரிசைப்படி அழகாகக் கோர்த்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

Poker Jogatina

Content Jogue Para Abiscoitar Prêmios Nos Melhores Torneios Vídeo Poker Dado : Aprenda An aprestar Sem Perder Dinheiro Estratégias Básicas Para Apostar Poker Acessível Atrair