16460 அகாலத்தின் நித்தியக் கடல்.

தமிழ் உதயா (இயற்பெயர்: திருமதி பசுபதி உதயகுமாரி விவேகானந்தராஜா). சென்னை 600083: சந்தியா பதிப்பகம், புதிய எண் 77, 53ஆவது தெரு, 9ஆவது அவென்யூ, அசோக் நகர், 1வது பதிப்பு, 2018. (சென்னை 600083: விக்னேஷ் பிரிண்டர்ஸ்).

96 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21×14 சமீ., ISBN: 978-93-87499-51-5.

‘பேரிழப்பின் பிடியில் சிக்கித் தவிக்கும் உள்ளத்தின் தனி மொழிதல்களாக பல்வேறு குறுங்கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஆற்றாமையின் ஆழத்துள்ளிருந்து வெளிப்படுகின்றன தமிழ் உதயாவின் கவிதைப் பிரதிகள். தனக்கான கவிதையாடல்களைக் கட்டமைத்துக் கொள்ளும் போக்கில் உணர்வெழுச்சியின் உச்சத்தில் உதிரும் சொற்கள் வாசகனுக்குள் எழுப்பும் சொல்லொணா கிளர்ச்சியே இவ்வகையான கவிதைகளின் தனித்த அடையாளம். கவிதையின் இறுதி வரிகள் ஒரு நிலை மாற்றத்திற்கான பறத்தலில் முடிகிறது.” (கவிஞர் எஸ்.சண்முகம், அணிந்துரையில்).

ஏனைய பதிவுகள்

16268 அகல்விழி-தரம் 1 : முதலாம் தவணை. காயத்ரி வெளியீட்டாளர்கள்.

தெகிவளை: காயத்ரி பப்ளிக்கேஷன்ஸ், தபால் பெட்டிஎண்-64, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (தெகிவளை: காயத்ரி பப்ளிக்கேஷன்ஸ்). 60 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 24×18 சமீ. தரம் ஒன்று மாணவர்களுக்கான