சிவசேகரன். குடத்தனை : உயிலடி வெளியீடு, உயிலடி இலக்கியக் கூடாரம், குடத்தனை வடக்கு, 1வது பதிப்பு, மார்ச் 2023. (நெல்லியடி: பரணி அச்சகம்).
136 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-624-98799-2-8.
ஈழத்து நவீன கவிதை மரபில் தொடர்ச்சியாக இயங்கிவரும் புதிய தலைமுறைக் கவிஞர்களில் ஒருவரான சிவசேகரன், யாழ்ப்பாணம், வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் கிராமத்தில் 17.05.1992 இல் பிறந்தவர். 2004 ஆம் ஆண்டு முதல் குடத்தனை வடக்கில் வாழ்ந்துவருகிறார். 2012 முதல் தொடர்ச்சியாக இலக்கியத்துறையில் இயங்கி வருவதுடன் ’உயிலடி” என்ற இலக்கிய அமைப்பை உருவாக்கி அதனூடாக நூல் வெளியீடு மற்றும் புத்தகக் கண்காட்சியையும் மேற்கொண்டு வருகிறார். 2017இல் ‘மட்டைவேலிக்குத் தாவும் மனசு”, 2022இல் ‘ஒரு கூடைக் குறும்பூ” ஆகிய நூல்களைத் தொடர்ந்து இது இவருடைய மூன்றாவது நூலாக வெளிவந்துள்ளது. இந்நூலில் உள்ள கவிதகைள் அந்நியமாக்கப்படுதலின் குரூர கணங்களையும், தனிமையின் பன்முக விகாரங்களையும் கண்முன் நிறுத்திவைப்பதோடு ஈழத்தவர் கடந்து வந்த இருண்ட காலங்களின் பகுதிகளையும் சில கவிதைகள் அழுத்தமாக பதிவுசெய்துள்ளன. 2018 தொடக்கம் 2022 வரை எழுதிய கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன.