16466 அருளப்பட்ட மீன் : கவிதைத் தொகுப்பு.

கருணாகரன். சென்னை 600106: பரிசல் புத்தக நிலையம், 235, P-Block எம்.எம்.டீ.ஏ.காலனி, அரும்பாக்கம், 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (சென்னை 600 005: ஏ.எஸ்.எக்ஸ் பிரின்டர்ஸ்).

96 பக்கம், விலை: இந்திய ரூபா 120., அளவு: 22×14 சமீ., ISBN: 978-93-91949-93-8.

தத்தளிப்பு, அமைதியின்மை, நினைவுகளின் அலைமோதல், சவால், போதாமைகளின் முன்னே நிற்கும் வாழ்க்கையை வெவ்வேறு விதமாக அணுகவும் ஆக்கவும் முயற்சிக்கின்றன இந்தக் கவிதைகள். கடினமாகிக் கொண்டே செல்லும் வாழ்க்கையை எப்படி எளிமைப்படுத்துவது என்ற மாபெரும் கேள்வியின் எதிரில் நிறுத்தப்பட்டுள்ளோம். இந்தக் கேள்வியை பதில்களால் நிரப்ப முடியாதபோது கடந்து சென்றுவிட முயற்சிக்கிறோம். அதற்கான எத்தனங்களாக இவற்றைக் கொள்ளலாம்.  நீங்களும் இந்தக் கவிதைகளும் ஆடும் வித்தைக் களமாக இவை உண்டு. இவற்றில் நீங்களும் உள்ளீர்கள் என்பது இன்னொரு சுவாரசியம் (நூலின் பின்னட்டை வாசகங்கள்). கடந்த காலத்தை நிகழ்காலத்துக்கு இழுத்துவரும் வேலையைச் செய்பவராக இருப்பதே கருணாகரனின் தனித்த அடையாளமாக இருக்கின்றது என்று பேராசிரியர் அ.இராமசாமி நூலுக்கான நயப்புரையில் குறிப்பிடுகின்றார்.

ஏனைய பதிவுகள்

Codeta Casino Review 2024

Content Payment Options | casino Vegas to Macau mobile The Codeta Is Closed All deposits are processed instantly and there is a minimum limit of

17775 செரண்டிப் (வரலாற்று நாவல்).

கே.எம்.எம்.இக்பால். கிண்ணியா-4: கே.எம்.எம்.இக்பால், அப்துல் மஜீது எம்.பி.வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2022. (திருக்கோணமலை: குரல் பதிப்பகம்). 156 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-0690-02-2. மூதூரைப் பிறப்பிடமாகவும்,