16467 அரூப நிழல்கள்.

சங்கரி சிவகணேசன். யாழ்ப்பாணம்: சிவசங்கரி சிவகணேசன், ஈஸ்வரிபுரி, புத்தூர் கிழக்கு, புத்தூர், 1வது பதிப்பு, ஜீலை 2022. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

120 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-99475-0-4.

‘ஒட்டுமொத்தமாகப் பெண்ணின் வாழ்வை உள்ளங் கையில் குவித்து வைத்துக் கொண்டு எங்கெங்கு எதையெதைத் தட்டிச் சீராக்கவேண்டும், உளிகொண்டு செதுக்கி நேராக்க வேண்டும் என்கின்ற வாழ்வியல் கடமையை இவரது கவிதைகள் செய்கின்றன” என்கிறார் இந்நூலுக்கான வாழ்த்துரை வழங்கிய கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி. பெண் சார்ந்த சமூகத்தை மேம்படுத்தவும், பெண்மை பற்றிய புரிதல்களை சமூகம் சரியாக உள்வாங்கிக்கொள்ளவும் வாசகரின் மனங்களை இக்கவிதைகள் பண்படுத்துமெனவும், மாற்றங்களையும் மறுமலர்ச்சிகளையும் தெளிவுகளையும் புரிதல்களையும் அவை ஏற்படுத்துமெனவும் இக்கவிஞர் நம்புகின்றார்.

ஏனைய பதிவுகள்