16469 அன்பின் விலாசம்.

சஞ்ஜீவன். திருக்கோணமலை: தனபாலசிங்கம் சஞ்ஜீவன், 23/10, சிவன் வீதி, 1வது பதிப்பு, 2022. (திருக்கோணமலை: எஸ்.எஸ். டிஜிட்டல்ஸ், திருஞானசம்பந்தர் வீதி).

(4), 58 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

காலப் பெருவெளியில் உதிர்ந்து கிடக்கும் நினைவுப் பூக்களை பொறுக்கி விளையாடும் சிறுவனாகத் தன்னை இனம்காணும் சஞ்ஜீவன், தன் வாழ்க்கைப் பயணத்தில் கரைசேர்ந்த கவிதைகளை நினைவுகளாகப் பத்திரப்படுத்தும் முயற்சியாக வாழ்க்கை, தேவதை உலவும் தெரு, தனிமை, வானம் செய்தல், இரவு, நட்பு, ஒரு தேடலின் கதை, பள்ளிக்கூடம், இசை, கச்சான் பூ, தமிழ்க் கிராமம், ஆசிரியர் தினம், உரிமைக்காக, மரம் எனும் உறவு, புன்னகை, முடிவிலாக் கணங்கள், தீராத கானம், அன்பின் தேசம், கவிதை, காதல், தெரு யாத்திரை, நியதி, கண்ணீர், கணம், பிரியாவிடை, நினைவழியா விலாசங்கள், மனதோடு ஒரு நிழற்குடை, அடக்கம், வாழ்ந்து பார், வசந்தத்தின் வாசஸ்தலங்கள் ஆகிய முப்பது கவிதைகளை இங்கு பதிவுசெய்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

12814 – மெல்லச் சாகும் வாலிபம் (சிறுகதைகள்).

நற்பிட்டிமுனை பளீல் (இயற்பெயர்: ஆதம்லெப்பை முஹம்மது பளீல்). கல்முனை: A.L.M. பளீல், நற்பிட்டிமுனை-1, 1வது பதிப்பு, 1997. (அச்சக விபரம் தரப்படவில்லை). 60 பக்கம், விலை: ரூபா 55., அளவு: 20 x 14