16472 ஆண் நிற வெயில்.

தமிழ் உதயா (இயற்பெயர்: திருமதி பசுபதி உதயகுமாரி விவேகானந்தராஜா). சென்னை 600083: சந்தியா பதிப்பகம், புதிய எண் 77, 53ஆவது தெரு, 9ஆவது அவென்யூ, அசோக் நகர், 1வது பதிப்பு, 2018. (சென்னை 600083: விக்னேஷ் பிரிண்டர்ஸ்).

96 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-87499-53-9.

காதல் அற்புதமானது, அழகானது, அது ஒரு மாய உலகம். பெரும் பசிகொண்டவன், உணவைக் கண்டவுடன் உலகை வென்றது போல் மகிழும் மனநிலை தான் காதல் என்று கூறும் தமிழ் உதயா, உலகத்தின் தத்துவமான காதலின் தீரா பேருன்னதத்தை மட்டுமே இத்தொகுதிக் கவிதைகள் பேசுகின்றார். கவிஞனை கவிதைகளோடு பொருத்திப் பார்க்காமல் எந்தவித முன்முடிவுகளும் எடுத்துவிடாமல் வாசித்துப் பார்க்கும்படியும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறார். இந்தக் கவிதைகளில் எங்குமே தான் இல்லை என்றும் உறுதியளிக்கிறார்.

ஏனைய பதிவுகள்

14919 தோழர்: இதுவொரு நினைவின் பதிவு (அமரர் சின்னத்தம்பி சண்முகநாதன் நினைவு மலர்).

மலர்க் குழு. கனடா: தோழர் சின்னத்தம்பி சண்முகநாதன் குடும்பத்தினர், 1வது பதிப்பு, மே 2016. (கனடா: அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 87 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. “சண்”