16476 இரவின் மழையில்: ஈழக்கவி கவிதைகள்.

ஈழக்கவி (இயற்பெயர்: ஏ.எச்.எம்.நவாஸ்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்).

xxii, 98 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-4676-12-1.

கவிதையை ஆத்மாவின் குழந்தையென்றும் உணர்வுகளின் மொழியென்றும் வர்ணிக்கும் ஈழக்கவி ஏ.எச்.எம்.நவாஸ் படைத்த 52 கவிதைகளின் தொகுப்பாக இரவின் மழையில் வெளிவந்துள்ளது. சங்ககாலக் கவிதைகள் போல, இவரது கவிதைகளும் காட்சிகளையும் நேரடிப் பண்புகளையும் முதன்மைப்படுத்துகின்றன. அவர் பயன்படுத்துகின்ற உவமைகள் தனித்துவமானவை. புதிய உணர்வுகளைத் தோற்றுவிப்பவை. இவரது கவிதைகளில் படிமங்களின் ஆட்சி அதீதமானது. இவரது காதல் கவிதைகளில் இதனை அதிகமகவே அனுபவிக்க முடிகின்றது. மேலும், யுத்தம் பற்றிய கவிதைகள் அனைத்திலும் யுத்தத்தின் கொடுமைகள் வெளிப்படுகின்றன. இவரது கவிதைகளின் இன்னொரு சிறப்பம்சம்,  பழந்தமிழ்க் கவிதைகளின் வரிகளைத் தன்னுடைய கவிதைகளில் பிரக்ஞைபூர்வமாகக் கையாண்டிருப்பதாகும். வெலிமடையைச் சேர்ந்த ஏ.எச்.எம்.நவாஸ் ஈழக்கவி, நவாஷ் ஏ.ஹமீட், ந.ஸ்ரீதாசன் ஆகிய புனைபெயர்களில் எண்பதுகளிலிருந்து தொடர்ச்சியாகக் கவிதைகளை எழுதி வருகின்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையில் சிறப்புப் பட்டம் பெற்ற இவர், அப்பல்கலைக்கழகத்தின் மெய்யியல்-உளவியல் துறையில் சிலகாலம் (1995-2000) விரிவுரையாளராகக் கடமையாற்றியவர். தற்போது பாடசாலை அதிபராகப் பணியாற்றுகின்றார். இந்நூல் 32 ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

11380 ஏகலைவன்: தென்மோடிக் கூத்து.

தமயந்தி. நோர்வே: உயிர்மெய் பதிப்பகம், Kaptein Linkes vei 9A,  6006 Aalesund, 1வது பதிப்பு, 2014. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). xv, 50 பக்கம், புகைப்படங்கள், விலை: