தா.இராமலிங்கம் (மூலம்), ச.மார்க்கண்டு (தொகுப்பாசிரியர்). கொடிகாமம்: இராமலிங்கம் அருட்செல்வம், மீசாலை வடக்கு, 1வது பதிப்பு, தை 2022. (சாவகச்சேரி: மிக்கி பிரிண்டிங் ஸ்பெஷலிஸ்ட் A9 வீதி, சங்கத்தானை).
xxii, (2), 176 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 500., அளவு: 21×14 சமீ.
கவிஞர் தா.இராமலிங்கம் மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தின் முன்னைநாள் அதிபராவார். இவரது முன்னைய நூல்களான “புதுமெய்க் கவிதைகள்”, “காணிக்கை”, ஆகிய இரு சிறு நூல்களில் இடம்பெற்ற கவிதைகளுடன் அவ்வப்போது ஊடகங்களில் பிரசுரமான மேலும் பல கவிதைகளையும் சேர்த்து இத்தொகுப்பு நூல் வெளிவந்துள்ளது. கவிதைகள் அனைத்தும் மனமுகை, சமூக அரும்பு, அரசியல் முகிழம், ஆன்மிக மலர் ஆகிய நான்கு இயல்களில் வகுத்துத் தரப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் கவிஞர் முருகையன் அவர்களின் ஆய்வுரை, எஸ்.பொன்னுத்துரை முன்னீடு, மு.தளையசிங்கம் ஆய்வுரை என்பன இடம்பெற்றுள்ளன. தா.இராமலிங்கத்தின் கவிதைகளிலே முழுக்க முழுக்க அவரிடமிருக்கும் தன்காலம், சூழல் பற்றிய உணர்வும், அந்த உணர்வு பிறப்பிக்கும் திருப்தியின்மையும், அந்தத் திருப்தியின்மை கோரும் மாற்றமும் தான் முத்திரை பதித்து நிற்கின்றன.