16478 இல்லற நொண்டி (The Husband and Wife).

அ.சதாசிவம்பிள்ளை (J.R.Arnold). மானிப்பாய்: ஜே.ஆர்.ஆர்னோல்ட் புத்தக ட்ரஸ்ட், 1வது பதிப்பு, 1887. (யாழ்ப்பாணம்: ஏ.சீ.எம்.பிரஸ், 464, ஆஸ்பத்திரி வீதி).

80 பக்கம், விலை: ரூபா 30.00, அளவு: 21.5×14.5 சமீ.

இது உதயதாரகைப் பத்திராதிபரும் யாழ்ப்பாணக் கல்லூரித் தமிழ் ஆசிரியருமாகிய ஆர்னல்ட் சதாசிவம்பிள்ளை (J.R.Arnold) அவர்களால் இயற்றிப்பட்டு, இராசாங்க லிகிதர் சாலையிலே பதிவுபெற்று, மானிப்பாய் ஸ்திறோங் அஸ்பரி இயந்திரசாலையில் (Strong & Asbury Printers, Manipay) 1887இல் வெளியிடப்பட்ட மூலநூலின் பின்னைய மீள் பதிப்பு இதுவாகும். செய்யுள் உருவில் எழுதப்பெற்றுள்ள இந்நூலில் தெய்வஸ்துதி, இல்லறம் புரிதற்கேற்ற உத்தம ஆடவர் இலக்கணம், உத்தம ஆடவர், அகோ! வாரும் பிள்ளாய் நொண்டி! இல்லறத்துக்காகாத அதம ஆடவர் இலக்கணம், அகோ! வாரும் பிள்ளாய் நொண்டி! நற்குணப் பெண்டிர் இலக்கணம், அகோ! வாரும் பிள்ளாய் நொண்டி! துற்குணப் பெண்டிர் இலக்கணம், வாழி ஆகிய தலைப்புகளில் செய்யுள்களும் உரைகளும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்