16480 இவனைச் சிலுவையில் அறையுங்கள்.

வி.மைக்கல் கொலின். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2021. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி). 

xiv,(2), 56 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5849-00-0.

கத்தோலிக்கர்களின் பாஸ்கா காலத்தின் ஆரம்ப நாள் விபூதிப் புதன தொடங்கி, பாஸ்கா காலத்தின் 47 நாட்களின் ஒவ்வொரு நாளையும் பாடுகளின் பாதையை தியானித்துக் கவிதைகளாக்கும் முயற்சி இது. ஒவ்வொன்றும் புனித வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டின் நாயகன் இயேசு கிறிஸ்துவுடன் தொடர்பான சம்பவங்கள் அவரது போதனைகள், அவர் மக்களுக்கு சொன்ன உவமைகள் என ஒவ்வொன்றையும் மறுவாசிப்புக்கு உட்படுத்திய கவிதைகள் இவை. புதிய ஏற்பாட்டின் சம்பவங்கள், குறிப்பாக இயேசுவுடன் தொடர்புபட்ட ஒவ்வொரு நிகழ்வும் எம் மண்ணின் நிகழ்வோடு எம் மக்களின் வாழ்வோடு இணைந்து நிற்பதை இக்கவிதைகளின் மூலம் புரிந்துகொள்ளலாம். இந்நூல் 41ஆவது மகுடம் பிரசுரமாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

17775 செரண்டிப் (வரலாற்று நாவல்).

கே.எம்.எம்.இக்பால். கிண்ணியா-4: கே.எம்.எம்.இக்பால், அப்துல் மஜீது எம்.பி.வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2022. (திருக்கோணமலை: குரல் பதிப்பகம்). 156 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-0690-02-2. மூதூரைப் பிறப்பிடமாகவும்,