16483 உதிரிப் பூக்கள் : கவிதைத் தொகுப்பு.

இந்திராணி புஷ்பராஜா. மட்டக்களப்பு: இந்திராணி புஷ்பராஜா, இல. 6, திருமகள் வீதி கிழக்கு, கல்லடி, உப்போடை, 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).

iv, (5), 65 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22×15.5 சமீ., ISBN: 978-955-71285-1-1.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடி-உப்போடையில் பிறந்து விஞ்ஞான ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக, பிரதி அதிபராக, அதிபராக எனப் பல தளங்களில் பணியாற்றியவர் திருமதி இந்திராணி புஷ்பராஜா. இவர் ‘குயில் குஞ்சுகள்” என்ற சிறுகதைத் தொகுதியையும், ‘சிறுவர் பூங்கா”, ‘விண் தொட எழுவோம்”, ‘மொட்டுக்களின் மொட்டுக்கள்” ஆகிய சிறுவர் இலக்கியங்களையும் முன்னதாக வெளியிட்டுள்ளவர். இவரது தேர்ந்த கவிதைகளின் தொகுப்பு இது. தான் பார்த்த, நுகர்ந்த, அனுபவித்த பல உணர்வுகளில் இருந்து பிறந்த கவிதைகளை இங்கு உதிரிப்பூக்களாகச் சேகரித்து வழங்கியுள்ளார். காலச் சுழற்சியிலே சமுதாயக் கொடியில் இருந்து அனுபவ முத்துக்களாய் சிதறுகின்ற ஆயிரமாயிரம் எண்ணப் பூக்களில் ஐம்பது பூக்களைத் தேர்ந்து இங்கு வாசகரோடு பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்

16995 நோபல்பரிசுபெற்ற இயற்பியலறிஞர்கள் – 09 (1978-1983).

நா.சு.சிதம்பரம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park,  1வது பதிப்பு, 2018. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).  80 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 280., அளவு: