16484 உயிர் சுமந்த சுமை.

கிருஷ்ணவேணி (இயற்பெயர்: சாந்தி விக்ரர் மான்ன்). பரந்தன்: திருமதி சாந்தி விக்ரர் மான்ன், 1/4 ஏக்கர், குமரபுரம், 1வது பதிப்பு, பங்குனி 2015. (கிளிநொச்சி: வேழன் பதிப்பகம், கனகபுரம் வீதி).

96 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×13.5 சமீ.

சாந்தி விக்டர் (1966.02.18) கிளிநொச்சி, பரந்தனில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை பொன்னையா தாய் இந்திராணி. கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரியில் உயர்தரம் வரை கற்ற இவர், 1980ஆம் ஆண்டு எழுத்துத்துறைக்குள் பிரவேசித்துள்ளார். கவிதை, சிறுகதை, கட்டுரை எழுதும் பன்முகத் திறமைகளைக் கொண்ட இப்படைப்பாளியின் ஆக்கங்கள் வீரகேசரி, ஈழநாதம் ஆகிய நாளிதழ்களில் வெளிவந்துள்ளன. ”உயிர் சுமந்த சுமை” என்னும் இவரின் கவிதைத் தொகுதியின் முதலாம் பாகம் 2015ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. ஆயிரம் கவிஞர்களின் கவிதை நூலிலும் இவரது இரு கவிதைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2018ஆம் ஆண்டு பரந்தன் வட்டாரம் கரைச்சி பிரதேச தேர்தலில் பெண் வேட்பாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்று பிரதேச சபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு அரசியல் ரீதியாக மக்களுக்கு சேவை செய்து வருகிறார். பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் பெண்களை அணிதிரட்டி இவர் போராடி வருகிறார். கிளிநொச்சி இரணைமடு விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் தனியொரு பெண்ணாக குரல் கொடுத்து வருகிறார். இக்கவிதைத் தொகுப்பில் இவரது 54 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. சமூகம் தொடர்பான பல கூட்டல் கழித்தல்களைத் தன் அறிவுக்கெட்டியவரை வகுத்துத் தொகுத்துத் தந்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

Vikings Position

Articles Freedom Harbors Local casino Incentive Rules Egt Slots: All of our Achievement Maria Gambling establishment Bonus Code: Lcb777 But, in a number of conditions,