16487 ஊசல் : ஒரு தேடல்.

செல்வக்குமார். யாழ்ப்பாணம்: வாமதேவா தியாகேந்திரன், பிறை வெளியீடு, 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரின்டர்ஸ், 817, ஆஸ்பத்திரி வீதி).

138 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-41299-0-0.

செல்வம் என்ற பெயரில் ஊடகத்துறையில் அறியப்பட்ட செல்வக்குமார் ஒரு கவிஞராகவும் ‘நமது ஈழநாடு” பத்திரிகையில் பத்தி எழுத்தாளராகவும் செயற்பட்டவர். தமிழகத்தில் வாழ்ந்த சில காலம் கவிஞர் அறிவுமதியின் செயலாளராகப் பணியாற்றிய காலகட்டத்தில் கவிதை எழுதப் பழகியவர் இவர். தனது உணர்வுகளையும் அவதானிப்புகளையும் இரத்தினச் சுருக்கமாகப் பதிவிடும் ஆர்வமும் அர்ப்பணிப்பும் இந்த ஆக்கங்களில் தெளிவுறத் தெரிகின்றன. வாழ்வின் காலவோட்டத்தில் பார்த்த, அறிந்த, தொட்டுணர்ந்த நிகழ்வுகளை இயல்பான நதியின் சலசலப்பில்லா ஓட்டத்தைப் போல இத்தொகுப்பில் ஓடவிட்டிருக்கிறார். ஊசி முனையான, மின்னல் வெட்டான கவிதைகள் இத்தொகுப்பில் நிறையவே உள்ளன.

ஏனைய பதிவுகள்

14890 இலங்கை தேசப்படத் தொகுதி: இரண்டாம் பாகம்.

இலங்கை நில அளவைத் திணைக்களம். கொழும்பு 5: இலங்கை நில அளவைத் திணைக்களம், இல. 150, கிருல்ல வீதி, நாரஹேன்பிட்டிய, 1வது பதிப்பு, நவம்பர் 2013. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). xii, 161 பக்கம்,