16510 கண்ணீர் பூக்கள் : வேரற்கேணியன் கவிதைகள்.

எஸ்.பி.கிருஷ்ணன் (புனைபெயர்: வேரற்கேணியன்). யாழ்ப்பாணம்: எஸ்.பி.கிருஷ்ணன், 244/4, கண்டி வீதி, அரியாலை, 1வது பதிப்பு, மார்ச் 2022. (யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண மாநகர கூட்டுறவுச் சங்கம், காங்கேசன்துறை வீதி).

(2), 52 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 16.5×12 சமீ.

இந்நூலில் ஒரு ஏதிலியின் வீடு (ஜீவநதி-சித்திரை 2012), வளமான எங்களூர் (புதுப்புனல்- ஒக்டோபர் 2013), பணிப்பெண் (ஜீவநதி-புரட்டாதி 2013), கைபேசிக்கு நேரே (புதுப்புனல்-ஒக்டோபர் 2013), வட்டமிடும் நுளம்பு (வலம்புரி-2013), தியாகம், பொய்யாமொழி, அதிட்டசாலிகள், அழிவு, மழை, பணி, ஒட்டுண்ணி (ஞானம்-மார்ச் 2014), பற்றைசூழ் குடிசை, பாவி மனிதன், ஒளிரும் கண்கள், தலைவிரி கோலம், குருடர், மோசடி, நாடு (ஞானம்-ஓகஸ்ட் 2014), அர்த்தம் புரிகிறது (ஞானம்-ஏப்ரல் 2014), எல்லோரும் செல்வர் என்று சொல்லவேண்டும் (ஜீவநதி-மார்கழி 2014), காளையர் கடன் (ஜீவநதி- வைகாசி 2014), அதர்மத்தை அழிக்க (ஞானம்-ஒக்டோபர் 2014), தாகம் மேலிட, என்ன நீதி, அந்நியர் உள்ளே, யாதுமூரே (ஞானம்-ஓகஸ்ட் 2015), பேருந்து (வலம்புரி- தை 2015), அம்மா போய்வருகிறேன் (ஞானம்-ஓகஸ்ட் 2018), விடுதலை வேள்வி (ஞானம் -நவம்பர் 2018), பாடும் பறவைகள் இல்லை (ஞானம்-பெப்ரவரி 2020), வைரத் தேக்கு (வலம்புரி- 16.02.2020), பரமஞானி நீ போதித்ததெல்லாம் (ஞானம்-மே 2020), சர்வதேசத்தில் கொரானா (ஞானம்-ஜீன் 2020), கண்ணீர் பூக்கள் (வலம்புரி 09.08.2020), உன் மழலைத் தமிழ் (ஞானம்-ஒக்டோபர் 2020), புதைகுழிகள் (ஞானம்-ஒக்டோபர் 2020), புட்பக விமானம் (ஞானம்-ஜீன் 2021), ஏன் போலிகளானோம் (ஞானம்-மே 2021) ஆகிய வேரற்கேணியனின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. எச்சில் இலை என்ற முதல் சிறுகதைப் படைப்பினை இலங்கையில், சுதந்திரன் பத்திரிகையில் 1958ம் ஆண்டு வெளியிட்டதுடன் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துறையில் கால் பதித்த S.P.கிருஷ்ணன், அவர்களின் முதலாவது நூல் 1970இல் அன்பு வெளியீடாக வெளிவந்த ‘ஒன்றே தெய்வம்”என்ற சிறுகதைத் தொகுப்பாகும். ‘கண்ணீர் பூக்கள்” அவரது 11ஆவது நூலாகவும் முதலாவது கவிதைத் தொகுதியாகவும் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Промокод Настойка игорный дом Vodka Bet Casino

Абы пользоваться фриспинами, вдолдонитесь, что дополнение их применения воцаряют собственно для избранной вами забавы. Промокоды позволяют геймерам выдавать на-гора уникальные бонусы, активируемые только дли вводе