16513 கலைந்த தேனீக்கள்: கவிதைத் தொகுப்பு.

சு.வரதன் (இயற்பெயர்: சுப்பிரமணியம் வரதகுமார்). வவுனியா: தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, மார்ச் 2009. (வவுனியா: ஒன்லைன் அச்சகம்).

xvi, 84 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 200., அளவு: 17.5×11.5 சமீ.

சு.வரதகுமார் பருத்தித்துறையில் புலோலி வடக்கைச் சேர்ந்தவர். ஆற்றலும் இலக்கியத் துடிப்பும் கொண்ட பட்டதாரியான இவர் உளவியல், சமூகவியல் துறைகளில் கற்றுத் தேறியவர். நாடகமும் அரங்கியலும் துறையை விசேட தகைமையாகக் கொண்டவர். புதுக்கவிதை, மரபுக் கவிதை இரண்டினதும் அடியொற்றி எழுதப்பட்ட 42 கவிதைகளை இத்தொகுப்பில் இடம்பெறச் செய்துள்ளார். இவள் காற்றே…, பிஞ்சிலே, எனக்குள்ளே, பருவவிதி, புதியன புகுதல், அதிகாரக் கதிரை, தூரத்து மாப்பிள்ளை என இன்னோரன்ன தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

12961 – தென் கிழக்கு ஆசியா.

ஈ.எச்.ஜீ.டொபி (ஆங்கில மூலம்), சோ.செல்வநாயகம் (தமிழாக்கம்). கொழும்பு 3: இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 1970. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). xviii, 496 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: