க.சின்னராஜன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
x, 86 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-624-5881-27-7.
புதுவை க.சின்னராஜன், வட அல்வை க.சின்னராஜன், சித்திரா சின்னராஜன் என்னும் பெயர்களில் இலக்கிய உலகில் உலாவிவரும் இக் கவிஞரின் மூன்றாவது நூல் இது. மரபுக்கவிதை-புதுக்கவிதை என இரு தளங்களிலும் பயணிக்கும் சின்னராஜனின் ஐம்பது ஆண்டுகளின் எழுத்தூழியத்தில் இன்னுமோர் அறுவடையாக இந்நூல் வெளிவந்துள்ளது. இத்தொகுதியில் அடங்கியுள்ள 40 கவிதைகளும் தமிழ்க் கவிதை வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தோற்றம்பெற்ற வடிவங்களை அவற்றின் செல்நெறியாகக் கொண்டுள்ளமையை அவதானிக்கலாம். பழந்தமிழ் இலக்கியத்தில் கவிஞருக்குள்ள ஈடுபாட்டையும் அறிவையும் இந்நூலில் உள்ள சில கவிதைகளின் வாயிலாக அறியமுடிகின்றது. வங்கி முகாமையாளராகப் பணியாற்றிய இவர் இளமைக் காலம் முதல் தீண்டாமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய முக்கியமானதொரு படைப்பாளியாக இனம்காணப்பட்டவர். இவரது முதலாவது நூலாக ‘வல்லை வெளி” என்ற கவிதைத் தொகுதி வெளிவந்தபோது, அது வட மாகாண கலை பண்பாட்டு அமைச்சின் சிறந்த கவிதை நூலுக்கான விருதினைப் பெற்றிருந்தது. இந்நூல் 212ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.