16516 கழுதை சுமந்த கவிதைகள்.

கவிகூத்தன் (இயற்பெயர்: க.பிரேம்சங்கர்). லண்டன்: க.பிரேம்சங்கர், 1வது பதிப்பு, கார்த்திகை 2021. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ பிறின்டர்;ஸ், பிரவுண் வீதி).

(2), 83 பக்கம், வண்ண ஓவியங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-624-6029-01-2.

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியாசாலை, யாழ். இந்துக் கல்லூரி, ஆகியவற்றின் பழைய மாணவரான பிரேம்சங்கர், தனது நீண்டநாள் கவிதைச் சேகரத்தை தன் முதலாவது தொகுப்பாக வெளியிட்டுள்ளார். கழுதை சுமந்த கவிதைகள், புவி மீது புனிதமாக, கருத்தைக் கருத்தால் அடிப்போம், சுடலை ஞானம், இடிந்து விழுந்தாலும் இது என் கோட்டை, கடமை அடிமையல்ல, ஏணிப்படிகள், ஏந்திய துமுக்கி, காப்பியின் முத்தங்கள், ஆடு ஆண்டவா, இதழோ இனிமை, இலிங்கமும் இன்பமும், இன்று என் அழகு, மலையக மக்கள், தமிழர்களின் தலைகீழ் மாட்டுப் பொங்கல், முகமூடிகள், மகளிர் தினம், எம்மவர் கைங்கரியம், கையாலாகாதவன் காதலர் தினம், நினைத்துப் பார்க்கிறேன், என் வாள் வீசும், வீர நிலவு விரகாய் எரியும், மனதிலே ஒரு பாட்டு, காதல் சொன்னாள், நன்றி(ப்) பொங்கலே, இதம், நல்லதோர் வீணை செய்தே, புத்தனின் நீதி, மாட்டுப் பொங்கல், முண்டு கொடுத்தல், அன்னையரே வாழ்க, நத்தார் பண்டிகை, விளையாடு காதலே, இனி எப்போ வரும் அக்காலம், விழுதை அறுத்த வீரர், தேக சுகம், இரவு அணைக்கிறது, மழைக்கால நினைவு, அன்பு மாறாது, போர்க்கால ஊரடங்கு, காதலும் கூடலும், முல்லைப் பறவைகளே பாடுங்கள், வேததாசி, வயோதிபக் காதல், எதுவும் தவறில்லை, தீபாவளி, தீண்டாமையா சுயபாதுகாப்பா, விடிவது என்பது விசித்திரமே, தென்றல் தொட்டுப்போகும் தேகம், தொட்டுச் செல்லாதே, துணிந்துவிடு, உடன்கட்டை, வாள்களே வீழ்க, நல்வாழ்வுக்காய், வரலாறே நீ தொலைந்தாலும், வயோதிப வாலிபம், மகளே பத்திரம், அன்பே ஆண்மை, எதைத் தருவாய், நான் கண்ட பாரதி, நேற்றைய குடி, நான் பசு, நித்தம் நின் பாதம் வணங்கவேண்டும், நோன்பு, ஓ கவிஞர்களே, படி தாண்டாப் பத்தினி, பறவைகள் நம் உறவுகள், பற்றற்ற பயணம், பொழிந்த மழை காற்றாய் மாற, என் மரண ஊர்வலம், இரவில் எத்தனை நட்சத்திரங்கள், மூடு மேகமே, திருந்தாரோ?, கொஞ்சவா விடவா? ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகள் இவை.

ஏனைய பதிவுகள்

Double Diamond Slot machine

Blogs See the Provides Tips Enjoy Online Ports The way we Manage All of our Band of Free online Gambling establishment Slots You can find