அரியாலையூர் மிஷாந்தி செல்வராஜா. யாழ்ப்பாணம்: மிஷாந்தி செல்வராஜா, கோபால் வெளியீட்டகம், இல. 40/1, நொத்தாரிஸ் வீதி, அரியாலை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2017. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).
xv, 56 பக்கம், விலை: ரூபா 220., அளவு: 18.5×12.5 சமீ., ISBN: 978-955-78990-3-9.
யாழ்ப்பாணம், அரியாலையைப் பூர்வீகமாகக் கொண்டவர் மிஷாந்தி. ஏற்கெனவே ‘மூன்றாம் முத்தம்” என்ற குறுநாவலை 2015இல் வெளியிட்டவர். ‘கருவில் சுமந்து கவிதைகள் பேசி கலையாய் வடித்தெடுத்து” என தாய்மை பற்றிய உணர்வாய் நீளும் ‘அம்மா” என்னும் தலைப்பில் தொடங்கி ‘இத்தனையும் கிடைத்திடுமோ?” என்ற தலைப்பு வரை 55 கவிதைகள் இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. கவிஞரின் மனம் குழந்தைத்தனமானது எனக் கூறும் வகையில் மழலை ஏக்கமாகப் பல கவிதைகளில் உணர்வு வரிகளைக் காண முடிகின்றது. இவ்விளம் கவிஞரின் வயதுக்கேற்ற பக்குவமான கவிதைகள் இவை. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 260965).