16558 பூக்காலம்.

வெலிமடை ரபீக். கொழும்பு 10: வெள்ளாப்பு வெளி, ஏ 6, 2/1 என்.எச்.எஸ்., கலைமகள் வீதி, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 10: எஸ். அன்ட் எஸ். பிரின்டர்ஸ், 49, ஜயந்த வீரசேகர மாவத்தை).

xxiv, 85 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22×15.5 சமீ., ISBN: 978-955-0280-06-3.

எண்பதுகளில் கவிதை இலக்கியத்திற்குள் பிரவேசித்திருந்த கவிஞர்களுள் ஒருவரான ரபீக்கின் இரண்டாவது கவிதைத் தொகுதி இது. மேக வாழ்வுக்குப் பின் வெளிவரும் பூக்காலம் அவரது இதயராகங்களை மீண்டும் மீட்டியுள்ளன. தினகரன் கவிதைச் சோலை, கவிதாசாகரம் ஆகிய களங்களினூடாகக் கவிதைகளைப் படைத்து வந்தவர் பின்னாளில்  கூர்மையடைந்த பேனா முதிர்ச்சியுடன் தொடர்ந்தும் வீரியத்துடன்  தன் எழுத்தாக்கங்களைப் படைத்த வருகிறார். “மேகத்தைப் போலவே வாழவிரும்பும் சகல மனிதர்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை மீட்டுவதாக மேகவாழ்வைப் பொழிந்த வெலிமடை ரபீக், சமூகத்தின் உயிர் அடிபடும் போதெல்லாம் வெடித்து விழும் வேதனைகளிலும் துடித்தெழும் உணர்ச்சிப் பிரவாகத்திலும் தன் கவிதைகளைப் பூவில் தோய்த்து வருடச் செய்கிறார். இந்த வருடல்களில் சுகத்துக்கும் அப்பால் வாசக மனசைப் பிராண்டிச் சுடும் கவிதைக் கனல் கொதிக்கின்றது” (முல்லை முஸ்ரிபாஅணிந்துரையில்). அகதி வாழ்வில் தொடங்கி யாசக ஒப்பாரி ஈறாக 35 கவிதைகளை இத்தொகுப்பில் காணமுடிகின்றது.

ஏனைய பதிவுகள்

17298 இடர்பாடு கொண்ட மாணவர்களின் நடத்தைகளில் உள-சமூகக் காரணிகளின் தாக்கம்.

விஷ்ணுவர்த்தினி பரணீதரன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2023. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 24 பக்கம், விலை: ரூபா 150., அளவு:

16328 குழந்தையின்மை : விளக்கங்களும் தீர்வுகளும்.

சி.ரகுராமன், பா.பாலகோபி. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). vii, (3), 76 பக்கம்,