16640 கடைக்குட்டியன்.

வி.ஜீவகுமாரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

xiv, 226 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-5881-16-1.

இந்நூலில் ஜீவகுமாரனின் இருபது கதைகளும் அக்கதைகளுக்கான பிற படைப்பாளிகளின் விமர்சனங்களும் இணைந்து காணப்படுகின்றன. மாதுளம் மொட்டுகள் (விமர்சனம்- சண்முகசிவா-மலேசியா), அன்னதானம் (விமர்சனம்-அருந்தவராஜா-சுவிஸ்), அம்மா (விமர்சனம்- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்- லண்டன்), எங்கெங்கு காணினும் (விமர்சனம்-கே.எஸ்.துரை-டென்மார்க்), அலைகள் (விமர்சனம்-ரூபன் சிவா-பிரான்ஸ்), இலைமறை தாய் (விமர்சனம்-கௌரி சிவபாலன்-ஜேர்மனி), அவனும் அவளும் (விமர்சனம்-லதா உதயன்-சுவிட்சர்லாந்து), முற்பகல் (விமர்சனம்-பொ.கருணாகரமூர்த்தி-பேர்லின்), நகரம் (விமர்சனம்- ஆசி.கந்தராஜா-அவுஸ்திரேலியா), முன்னை இட்ட தீ (விமர்சனம்- மதியுகநாதன்- இங்கிலாந்து), நானும் என் சின்ன மச்சாளும் மருமகனும் (விமர்சனம்- விஷ்ணுவர்த்தினி பரணீதரன்-இலங்கை), கரும்புச்சாறும் வெள்ளிவிழாவும் (விமர்சனம்-நீலகண்டன்- இந்தியா), கடைக்குட்டியன் (விமர்சனம்-புத்திசிகாமணி-ஜேர்மனி), நோ மோர் பீலிங் (விமர்சனம்-வே.சங்கர்-இந்தியா), கிணற்றடி (விமர்சனம்-நிலக்கிளி பாலமனோகரன்-டென்மார்க்), வானுயர்ந்த கோயில்கள் (விமர்சனம்-கனகலதா-சிங்கப்பூர்), தெத்தெரி தெத்தெரி (விமர்சனம்-வவுனியூர் இரா. உதயணன்-இங்கிலாந்து), வி.ஜீவகுமாரனாகிய நான் (விமர்சனம்-நா.மணி-இந்தியா), கமலி அக்காவும் பாலன் அண்ணாவும் (விமர்சனம்-சிவசுப்பிரமணிய ஐயர்-கனடா), மரணப்படுக்கை (விமர்சனம்-கோகிலா மகேந்திரன்-யாழ்ப்பாணம்) ஆகிய சிறுகதைகளுடன் அக்கதைகளுக்கு விமர்சனம் எழுதியவர்களின் விபரத்தையும் அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளேன். இந்நூலாசிரியர் புலம்பெயர்ந்த டென்மார்க்கில் வாழ்ந்தாலும் ஈழத்து உணர்வுகள் கொஞ்சமும் குறையாது உணர்வுபூர்வமான படைப்புகளை மிகச் சிறப்பாக வழங்கி வருபவர். புகலிடத் தமிழர்களின் இரண்டும் கெட்டான் நிலை, உறவுகளிடையே ஏற்படும் உணர்வுச் சிக்கல்கள், உறவுப் பிறழ்வுகள், மேலைத்தேய சமூக நீரோட்டத்திற்குள் தம்மை இணைத்தும் இணைக்கமுடியாத தடுமாற்றங்கள், தலைமுறை இடைவெளியால் ஏற்படுகின்ற கருத்து முரண்பாடுகள் என இவரது கதைகளின் களங்களும் பின்புலங்களும் சுவாரஸ்யமானவை. இந்நூல் 200ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Enjoy Free online Ports Games

There are even lots of position video game remark web sites you will get on line which go for the considerably more details, therefore definitely

Păcănele Online Gratis 2024

Content Dacă Pot A se auzi Ă Tocmac Odihnit Cazinou? Cum Obții O Licență Onjn Conj Fasona Un Cazino Online Legiuit Deasupra România Sfaturi De