16652 காப்பு : இலங்கைப்பெண் படைப்பாளர்களின் சிறுகதைகள்.

ஈழவாணி (தொகுப்பாசிரியர்). சென்னை 600093: பூவரசி வெளியீடு, இல.2, 2ஆவது தளம், 1ஆவது குறுக்குத் தெரு, புஷ்பா காலனி, சாலிகிராமம், 2வது பதிப்பு, மார்ச் 2019, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (சென்னை 600093: பூவரசி வெளியீடு, புஷ்பா காலனி, சாலிகிராமம்).

(20), 21-544 பக்கம், விலை: இந்திய ரூபா 600., அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978-93-81323-37-6.

இத்தொகுப்பில் ஈழத்துப் பெண் படைப்பாளர்களான யோகேஸ்வரி சிவப்பிரகாசம் (மலை முகடு சரிக்கப்படுகின்றது, அது உடைந்துவிடக் கூடாது), நா.பாலேஸ்வரி (எல்லைக்கோடு), நயீமா சித்தீக் (சாதுக்களும் மிரளும்), அருண் விஜயராணி (ரகசிய ரணங்கள், புதிய பாடம்), அன்னலட்சுமி இராஜதுரை (மண்ணில் வீழ்ந்த..), குந்தவை (யோகம் இருக்கிறது), கோகிலா மகேந்திரன் (மரணிப்பிலும் உயிர்க்கும்), பத்மா சோமகாந்தன் (காற்றில் கலந்த சோகம்), குறமகள் (பிரிவும் இன்பம் தரும், வாழ்க்கையின் திருப்பங்களும் வானத்துக் குழந்தைகளும்), தாமரைச்செல்வி (அடையாளம்), இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (நாஸர்), கெக்கிறாவ ஸஹானா (ஜென்ம நிழல், தந்தைமார்களும் மகன்மார்களும்), தாட்சாயணி (காணாமல் போனவனுக்கு ஒரு கடிதம்), ஆதிலட்சுமி சிவகுமார் (தாய்), சுலைமா ஏ.சமி (இவர்களும் மனிதர்களே), தமிழ்நதி (தாழம்பூ, மாயக் குதிரைகள்), சுமதி ரூபன் (வடு, ஆதலினால் நாம்), ஆனந்தி (அவன் கேட்ட பாடலுக்கு அவள் சொன்ன வேதம்), லறீனா அப்துல் ஹக் (எருமை மாடும் துளசிச் செடியும்), சந்திரா இரவீந்திரன் (கலையரசி), சாந்தினி வரதராஜன் (றைட்டோ), நிவேதா உதயராயன் (வாழ்வு வதையாகி, ரயில் பயணம்), நெலோமி (கொழு கொம்பு), ஸ்ரீரஞ்சனி (உள்ளங்கால் புல் அழுகை, பச்சை மிளகாய்), ஈழவாணி (வெண்ணிறத் துணி, நிர்வாண முக்தி), பிரமிளா பிரதீபன் (ஒரு இரவு, நான்காம் வகுப்பு), வானமதி (அவளுக்கொரு கண்ணன், மரத்த பிணமல்ல மனுஷி), யாழ். தர்மினி பத்மநாதன் (எண்பது ரூபாய், வாடகை வீடு), தமிழினி ஜெயக்குமரன் (மழைக்கால இரவு), வெற்றிச் செல்வி (குங்கும கேள்வி), தமிழ்க் கவி (ஆளுக்கொரு நீதி), ஆரபி சிவகுகன் (இனிச் சிறகுகள் முளைக்கும்), ப.விஷ்ணுவர்த்தினி (கடலம்மா), ஷாமிலா ஷெரீப் (அபாயா மாலை), ஜெஸீமா ஹமீட் (ரொட்டித் துண்டு), கீதா கணேஷ் (தொலைவு, அவள் அழவேயில்லை), கௌரி அனந்தன் (உயிரற்ற ஜீவன்கள்), சர்மிளா வினோதினி (பூக்களைத் தொலைத்த பூந்தொட்டி, நீங்க போங்கோ ராசா), லக்ஷி குணரட்ணம் (விடியல், பயணம்), ஜெயசுதா பாபியன் (பெண்மை) ஆகியோரது 41 சிறுகதைகளும், புண்யகண்டே விஜேநாயக்க (குரங்குகள்), சுநேத்ரா ராஜகருநாயக்க (எஸ்.எம்.எஸ்.), நிர்மாலி ஹெட்டியாராய்ச்சி (விலை), சீதா குலதுங்க (டீச்சர்), விஜிதா பெர்னாண்டோ (சொந்த மண்) ஆகியோரின் ஐந்து சிங்கள மொழிபெயர்ப்புக் கதைகளுமாக மொத்தம் 46 தேர்ந்த சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

12829 – மீண்டும் வசந்தம்.

திருமலை வீ.என்.சந்திரகாந்தி. திருக்கோணமலை: ஜெயகாந்தி கலை கலாச்சார விளையாட்டு மேம்பாட்டுக் கழகம், 572/A, ஏகாம்பரம் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (திருக்கோணமலை: ரெயினிபோ மினிலாப், 361, நீதிமன்ற வீதி). 200 பக்கம், விலை:

14230 மயில்வாகனம். மலர்க் குழு.

புங்குடுதீவு: ந.க.மயில்வாகனம் நினைவுக்குழு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1995. (கொழும்பு 13: யுனைட்டெட் மேர்ச்சன்ட்ஸ் லிமிட்டெட், 529/19, கே.சிறில் சி.பெரேரா மாவத்தை). 128 பக்கம், புகைப்படம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

Double Da Vinci Expensive diamonds

Blogs Pearl Harbor $1 deposit: Deckscape Dracula’s Palace Escape Place Card Game Davinci Games Dvg5739 People Home Of Davinci Iii An informed Game You will