16667 சிறகு விரிக்காத பறவைகள்.

நாவற்குழி சு.சிவராஜா. யாழ்ப்பாணம்: இலங்கை தேசிய பார்வையற்றோர் சம்மளனம், வட மாகாணக் கிளை, ஆடியபாதம் வீதி, கல்வியங்காடு, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (யாழ்ப்பாணம்: தெல்லி அச்சகம், கொக்குவில்).

x, 78 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×15 சமீ.

இலங்கை தேசிய பார்வையற்றோர் சம்மேளன அங்கத்தவரான நாவற்குழி நடராஜாவின் சிறுகதைத் தொகுதி இதுவாகும். இத் தொகுதியினூடாக, ஆசிரியர் அங்கக் குறைபாடுகளோடு வாழ்கின்ற சக மனிதர்களின் வாழ்வியல் சூழமைவுகளை உள்ளீர்த்து உணர்வுபூர்வமான சிறுகதைகளாக அவற்றை வெளிப்படுத்தியுள்ளார். மாற்றுத்திறனாளிகள் என்ற தற்கால அடையாளப்படுத்தலுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்ற சக மனிதர்கள் எதிர்கொள்கின்ற பல்வேறு நாளாந்தப் பிரச்சினைகளையும் உள்வாங்கி, அவற்றைத் தன் நேர்கொண்ட பார்வையில் பிரதிபலிக்கின்ற வகையில் இச் சிறுகதைகளைத் தந்திருக்கிறார். இத்தொகுதியில் ஒரு புதிய தரிசனம், வெள்ளை அறிக்கை, வீசும் காற்றாக வருவாரோ?, கண்ணீர் அட்சதைகள், ஒரு வெண்கட்டி தாலாட்டுப் பாடுகின்றது, அடிடா அடிடா நாக்கு மூக்கா, உன்னைச் சொல்லிக் குற்றம் இல்லை, படுதடிகள் துளிர்ப்பதில்லை, அவனே நெய்வேத்தியமானவன், சாக்கடையில் ஒரு தாமரைப்பூ, புயலுக்குப் பின்னே அமைதி, ஒரு புதிய பயணம், அம்மாவிற்குள் ஆயிரம் இருக்குது ஆகிய 13 கதைகள் இத்தொகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

16951 1981மே 31-ஜீன் 1 யாழ்ப்பாணத்தில் நடந்தவை – அதன் தொடர்ச்சி.

தங்க முகுந்தன். யாழ்ப்பாணம்: தங்க. முகுந்தன், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை). 28 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15சமீ. யாழ்ப்பாண நூலக எரிப்பையொட்டிய சம்பவங்களை பதிவுசெய்யும்