க.சட்டநாதன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
viii, 93 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-46-8.
க.சட்டநாதன் எழுதிய தாவாடிக்காரர்கள், தாபம், இருமுகம், நினைப்பதெல்லாம், வாழ்தல் என்பது, இனிது இனிது வாழ்க்கை இனிது, அன்பு வழி, நிரந்தரி, வாழ்க்கை வசப்படும், ஏறுமுகம், அவரவர் பார்வையில் ஆகிய பதினொரு சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஜீவநதியின் 226ஆவது வெளியீடாக இச்சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. எழுபதுகளில் இலக்கிய உலகில் காலடி வைத்த சட்டநாதன் (22.4.1940), யாழ்ப்பாணம்-வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர் முன்னர் “பூரணி” என்ற கலை இலக்கிய காலாண்டுச் சிற்றிதழின் இணையாசிரியராகவும் பணியாற்றியவர்.