16743 கறுப்பும் வெள்ளையும் (சமூக நாவல்).

செ.கணேசலிங்கன். சென்னை 26: குமரன் பதிப்பகம், 12/3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி 7வது தெரு, வடபழனி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017 (சென்னை: சிவம்ஸ்).

176 பக்கம், விலை: இந்திய ரூபா 70.00, அளவு: 18×12.5 சமீ.

இயற்கையின் படைப்பு விசித்திரமானதும் மர்மமானதுமாகும். கறுப்பு வெள்ளை நிற கண்களே அதனைக் காட்டும். கண்கள் உயிரினங்களின் வாழ்வில் முதன்மையானது எனலாம். மொழியில் கறுப்பும் வெள்ளையும் எதிர்ச் சொற்கள். உயிர் வாழ்வின் முன்னோடி. ஆயினும் வெள்ளைத் தோல் நிறமே கவர்ச்சியானது, சிறப்பானது என முதன்மைப்படுத்துவர். தோலின் உள்ளே ஓடும் உயிர் இரத்தம் எப்போதும் சிவப்பு என்பதை மறந்து விடுகின்றனர். நமது நாட்டு கறுத்தவரும் திருமணம் என்றால் தோல் நிறத்தையே பார்ப்பர். அழகும் கவர்ச்சியும் என வெள்ளை நிறப் பெண்ணையே தேடுவர். கலைகளிலும் வெள்ளைத் தோல் நிறமே முதன்மை பெறகிறது. இந்திய சினிமாவில் கவர்ச்சியான வெள்ளை இளம்பெண்ணே கதாநாயகி. மற்றைய நடிகர் பெரும்பாலும் கறுத்தவர். மேக்-அப் அழகர். வயதானவராகவும் இருக்கலாம். குடும்ப வாழ்வில் நிற வேற்றுமை ஆழ்மன அமைதியைக் கெடுக்கலாம். ஷேக்ஸ்பியரின் ”ஒதெல்லோ” நாடகத்தில் வெள்ளை அழகி ராணியை கறுத்த ஒதெல்லோ காதலித்து மணக்கிறான். தாழ்வு நிற மன உளைச்சலின் உச்சத்தில் தன் வெள்ளை அழகுராணி சோரம் போனாள் என்ற சந்தேகத்தில் அவளைக் கொலை செயகிறான். ஆணாதிக்கமும், மனைவி கொலையும், வெள்ளை வெறுப்பு எனலாம். அதே மன சஞ்சலம் இந்நாவலில் நடைபெறுகிறது. மனைவி சோரம் போனாள் என்ற சந்தேகத்தில் கொலைகளை நாளிதழ்களில் அடிக்கடி காண்கிறோம். இந்நாவலின் கதாநாயகன் சுபத்திரன் தன் நிறத்து கறுத்த பெண்ணைத் தேர்ந்த மணக்கிறான். கறுப்பு வெள்ளைத் தோலின் உள்ளே ஓடுகின்ற சிவப்பு இரத்தமே உயிர் மூச்சு என்பான்.

ஏனைய பதிவுகள்

Wildz

Content Netent Casino Prämie, Sunmaker Book Of Ra Freispiele Nur Einzahlung 2024 Netent Spielautomaten Wild Water Online Nehmt aktiv verschiedenen Events inoffizieller mitarbeiter Runde glied,