J.S.K.A.A.H. மௌலானா. இலங்கை: ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை-இலங்கைக் கிளை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (திருச்சி 620 009: அவ்னிய்யா பிரிண்டர்ஸ் அன்ட் பப்ளிஷர்ஸ் ட்ரஸ்ட், ஜாமிஆ யாஸீன் அறபுக் கல்லூரி வளாகம், சீத்தப்பட்டி பிரிவு, ஜே.ஜே.பொறியியல் கல்லூரி அருகில், மணப்பாறை ரோடு).
vi, 656 பக்கம், விலை: ரூபா 1650., இந்திய ரூபா 500., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-955-4986-24-4. இஸ்லாமிய இலக்கியச் சோலையில் சீறாப் புராணத்தின் மரபாக இந்நூல் மலர்ந்துள்ளது. இது இரண்டாம் கலீபா உமர் ரலி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை வண்ணக் கவிதையில் பேசுகின்றது. பெருமானார் ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் அவர்களின் அன்புத் தோழர்களில் இரண்டாம் இடத்தைப் பெற்ற உமர் ஃபாரூக் (ரலி) அவர்கள் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நிறுவுவதில் முக்கிய இடத்தினை வகித்தவர். இந்நூல் காப்பிய இலக்கணம், காவிய அலங்காரங்களுடன செந்தமிழ் நடையில் இயற்றப்பட்டுள்ளது. காண்டம் -1 (உதய காண்டம்), படலங்கள்-21 (இறை வாழ்த்துப் படலம், நாட்டுப் படலம், நகர்ப் படலம், குலமுறைப் படலம், உதய படலம், நீராடு படலம், அல்லலுறுத்து படலம், ஓட்டை மேய்த்த படலம், இடம்பெயர் படலம், கஉபாச் செலவு படலம், ஹ{தைபிய்யா உடன்படிக்கைப் படலம், மணமகட் டேடு படலம், திருமணப் படலம், பதுறுப்போர், உகதிற் போர், அகழ் யுத்தம், ஸவீக் சண்டை, ஹீனைன் போர், தபூக் போர், மக்கா வெற்றிப் படலம், நாயகர்மறைவுப் படலம்) பாடல்கள் 682 இம் முதலாம் பாகத்தில் இடம்பெற்றுள்ளன.