16821 பதுறு மவ்லிது : மூலமும் மொழிபெயர்ப்பும்.

அல்லாமா  மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹ்) (அறபு மூலம்), ஜமாலிய்யா அஸ்ஸயித் கலீல் அவ்ன் அல்ஹாஷிமிய் மௌலானா (தமிழாக்கம்). திருச்சி 620001: ஜமாலிய்யா பதிப்பகம், 35, இரண்டாவது தெரு, செல்வநகர், திண்டுக்கல் ரோடு, 4வது பதிப்பு, 2013, 1வது பதிப்பு, 1998, 2வது பதிப்பு, 2003, 3வது பதிப்பு, 2009. (தமிழ்நாடு: ரிப்தா கம்ப்யூட்டர் ஆப்செட் பிரிண்டர்ஸ், 229/4, மீரா காம்ப்ளெக்ஸ், ஃபயர் சர்வீஸ் எதிரில், மேற்கு ரத வீதி, திண்டுக்கல்).

176 பக்கம், புகைப்படம், தகடுகள், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ.

இந்நூலை தமிழாக்கம் செய்துள்ள ஜமாலிய்யா அஸ்ஸயித் கலீல் அவ்ன் அல்ஹாஷிமிய் மௌலானா (J.S.K.A.A.H. மௌலானா), சுன்னத் வல்ஜமா அத் கொள்கையை நிலை நிறுத்தவும், மஉரிபா என்னும் மெய்ஞ்ஞானத்தை அழியாமல் காப்பாற்றவும் அயராத பாடுபட்டு வருபவர். அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லள்ளாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் 34ஆவது வாரிசும், முஹிய்யுத்தீன் ஆண்டகை (ரலி) அவர்களின் 21ஆவது பேரரும், காமில்ஷைகுமாவார். சென்னை அங்கப்ப நாயக்கன் தெரு மஸ்ஜிதே மஉமூர் பள்ளியில்; அடக்கம்  பெற்றுள்ள இறை நேசர் “ஹஸன் மௌலானா (ரலி)” அவர்கள் இவர்களது பாட்டனார்களில் ஒருவர். சீர்காழி வட்டம் திருமுல்லை வாசலில் அடக்கம் பெற்றுள்ள மகாமேதை குத்புல் பரீத் ஜமாலிய்யாஅஸ்ஸய்யித் யாசீன் மௌலானா (ரலி) அவர்களின் அருள் மகவாகத் தோன்றி இலங்கை வலிகாமத்தில் (வலிகம) வாழ்கின்றார்.

ஏனைய பதிவுகள்

13A06 – காந்தி தரிசனம்.

எஸ்.பொன்னுத்துரை (தமிழாக்கம்). கொழும்பு 13: இளம்பிறை எம்.ஏ.ரகுமான், அரசு வெளியீடு, 231 ஆதிருப்பள்ளித் தெரு, 1வது பதிப்பு, 1969. (கொழும்பு 13: ரெயின்போ பிரிண்டர்ஸ், 231 ஆதிருப்பள்ளித் தெரு). 100 பக்கம், விலை: ரூபா