16831 பன்முக நோக்கில் சங்க இலக்கியம்: தமிழியல் ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு.

ம.இரகுநாதன், ஈ.குமரன் (பதிப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு-2021, தமிழ்த்துறை, கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2021. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

xvii 611 பக்கம், 6 புகைப்படத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×19 சமீ., ISBN: 978-624-97806-3-7.

2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16, 17 ஆம் திகதிகளில் யாழ்.பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நடைபெற்ற இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டில் வாசிக்கப்பெற்ற 63 கட்டுரைகளின் தொகுப்பு. இவை அகமும் புறமும், அரசும் போரும், சமயம், கலை, பொருளாதாரம், ஏனையவை ஆகிய ஆறு பிரிவுகளின் கீழ் வகுத்துத் தரப்பட்டுளளன. “அகமும் புறமும்” என்ற பிரிவில் புறநானூற்றில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் சமூக நல்வாழ்க்கைக்கான அறவியல் சிந்தனைகள், அகப்பொருள் சித்திரிப்பு- குறுந்தொகையையும் காதாசப்தசதியையும் அடிப்படையாகக் கொண்ட ஓர் ஒப்பியலாய்வு, பொருண்மொழிக் காஞ்சித்துறைப் பாடல்கள் கூறும் பொதுவறம், பத்துப் பாட்டில் அகமும் புறமும் இணைந்த பாடல்கள்-ஒரு கவிதையியல் வாசிப்பு, சங்க இலக்கிய அகப்பொருள் மரபும் திருக்குறளும், ஒப்பியல் நோக்கில் இனிமை மிகு பாடல் மற்றும் குறுந்தொகை, புறநானூற்றின் இயல்பும் உயர்வும்: இயன்மொழித்துறைப் பாடல்களின் வழியான கண்டடைதலும் மறுவாசிப்பும், புறநானூற்றுக் கையறுநிலைப் பாடல்கள்: ஒரு சமூக வரலாற்றாய்வு, குறுந்தொகை அகச் செய்யுட்களில் கருவும் உரியும், காஞ்சித்திணை: தொல்காப்பியம்-புறப்பொருள் வெண்பாமாலை, குறுந்தொகையில் தோழி கூற்றுக்கள்: ஓர் ஆய்வு, புறநானூறு பாடாண்திணையில் செவியறிவுறூஉப் பாடல்கள், பட்டினப்பாலை மீள்வாசிப்பு, சங்ககால ஆற்றுப்படை நூல்களின் தோற்றுவாயும் அதன் சிறப்பியல்புகளும் ஓர் ஆய்வு, மருதக் கலிப்பாடல்களில் மகளிர் மாண்பு ஆகிய கட்டுரைகளும், ‘அரசும் போரும்” என்ற பிரிவில் சங்ககால அரசியலும் மக்கள் வாழ்வும்-ஒரு செவ்வியல் ஆய்வு, சங்க இலக்கியங்களில் ஆண்களின் வீரத்தினை வெளிக்காட்டும் போரும் வீர விளையாட்டுக்களும், சங்க இலக்கியம் கூறும் அரசியல், சங்க இலக்கியத்தில் அரசியல் தொடர்பாடல், மதுரைக் காஞ்சியும் பாண்டியன் நெடுஞ்செழியனும், சங்க இலக்கியங்களில் வெளிப்படும் அரச முறைமைகளும் நல்லாட்சிப் பண்புகளும்: ஓர் ஆய்வு, சங்க இலக்கியங்களில் இழையோடும் தெய்வீக உரிமைக் கோட்பாட்டின் சாயல்கள்: புறநானூற்றை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு, புறநானூற்று மரபில் வேள்பாரி மன்னன்-கபிலரின் பாடல்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு, ஆதிக்க வெறியும் அறநெறியும்-புறநானூற்று பாடல்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு ஆகிய கட்டுரைகளும், ”சமயம்” என்ற பிரிவில் திருமுருகாற்றுப்படையில் முருக வழிபாடும் மேனிலையாக்கமும், சங்கச் சமூக வழிபாட்டு மரபில் பலியிடுதல், வீடுபேறு: திருமுருகாற்றுப்படையை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு, பொருநராற்றுப்படையில் அறவியல், சங்க-வைதிக இலக்கியங்களில் இந்திரன்: ஓர் ஒப்பீட்டாய்வு, சங்க இலக்கியங்களில் திருமால் குறித்த கருத்தாடல்கள், முல்லைக் கலிப்பாடல்களில் வழிபாட்டுச் செய்திகள் ஆகிய கட்டுரைகளும், ”கலை” என்ற பிரிவில், தொல்காப்பியம் கூறும் தமிழரின் அழகியல், சங்க இலக்கியங்களில் அரசர்களும் மறவர்களும் ஆடிய போர்க்கள ஆடல்கள், சங்க காலத்தில் குரவை பெறும் முக்கியத்துவம் பற்றிய ஓர் ஆய்வு, கலித்தொகை பாலைக் கலியில் சிருங்கார ரசத்தின் வகிபங்கும் பதம் என்னும் உருப்படி கட்டமைப்பும், தமிழர் கட்டடக்கலை மரபு-சங்க இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு, சங்ககாலக் கலைகளில் ஓவியமும அதன் வெளிப்பாடும்- ஓர் ஆய்வு, சங்ககால பழந்தமிழ் இலக்கியங்கள் வெளிப்படுத்தும் நிகழ்த்து கலைகளில் ஆடல், சங்க இலக்கியத்தில் யாழ்: அமைப்பும் ஆற்றுகையும், சங்ககால இலக்கியங்களின் ஊடாகப் பாவைக் கூத்தினை அணுகுதலும் அதனூடாகச் சமகால அரங்கை முன்னிறுத்துவதுமான ஓர் ஆய்வு, சங்ககால இலக்கியத்தில் கட்டடக் கலை, அரங்க ஆற்றுப்படுத்தல் நுட்பங்கள்: சங்க இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு, சங்க இலக்கியங்களில் வாழ்வியல் சிற்பக்கலையும் சமகால தமிழர் சிற்பக்கலை மரபில் அவற்றின் பிரதிபலிப்புகளும், சங்க இலக்கியங்களே தமிழர் ஆடலின் கருவூலம் ஆகிய கட்டுரைகளும், ”பொருளாதாரம்” என்ற பிரிவில், மதுரைக்காஞ்சி இலக்கியத்தில் மிளிரும் தமிழர்களுடைய வணிக வாழ்க்கை, சங்ககால வணிக முறைக்கும் அர்த்த சாஸ்திர வணிக முறைக்கும் இடையிலான ஓர் ஒப்பியல் ஆய்வு, சங்க இலக்கியங்களில் விவசாயத்தின் மேன்மை, சங்க இலக்கியங்களில் பழந்தமிழரின் கடல் வழி வாணிபம், சங்க இலக்கியங்களில் புலப்படும் பொருளாதார நடவடிக்கைகள் ஆகிய கட்டுரைகளும், ”ஏனையவை” என்ற பிரிவில், புறநானூற்றில் புலப்படும் சம்ஸ்கிருதச் சிந்தனைகள், சங்க இலக்கியங்களினூடாக வெளிப்படும் சூழலியல் கல்வி: குறுந்தொகையை மையப்படுத்திய ஓர் ஆய்வு, சங்க இலக்கிய ஒப்பியல் ஆய்வில் ஈழத்துத் தமிழறிஞர்களின் பங்களிப்பு, சங்க இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்படவேண்டியதன் இன்றியமையாமை, இலக்கிய நோக்கில் கீழடி அகழாய்வுச் சான்றுகள், ஆய்வு நோக்கில் ஈழத்து அறிஞரின் ஐங்குறுநூற்று உரை, சங்ககால இலக்கியங்களில் பெண்ணிய மெய்யியல் சிந்தனைகள்: புறநானூற்றை ஆதாரமாகக் கொண்ட ஆய்வு, உயர்தர வகுப்பு தமிழ்க் கலைத்திட்டத்தில் சங்க இலக்கியங்கள்: மனப்பாங்கு விருத்திக்கான கலைத்திட்ட வகிபாகம், சூழலியல் நோக்கில் சங்க இலக்கியங்கள், இலங்கைப் பாடசாலைக் கலைத்திட்டத்தில் சங்க இலக்கிய வகிபாகம்: ஓர் ஒப்பீட்டு நோக்கு, 20ஆம் நூற்றாண்டு ஈழத்து இலக்கிய முயற்சிகளில் சங்க இலக்கியத் தடங்கள், சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழலியல், பெண்மொழி நோக்கில் வெள்ளிவீதியார் கவிதைகள், குறுந்தொகைப் பாடல்களில் உரிச்சொற்களின் பயன்பாடு ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

King Billy Casino

Content Spielen Sie Renegades Slot online ohne Download | Welche Umsatzbedingungen Gelten Für Den Vulkan Vegas Bonus 25 Euro? Slothunter Casino: Freispiele Für Lucky Lady