16833 ஈழத்துத் தமிழ் அரசியல் நாவல் “எரிமலை”: ஒரு நுண்ணாய்வு.

ராஜரட்ணம் ருக்ஷான். ஹப்புத்தளை: நெம்புகோல் பதிப்பகம், நா செவன, வல்ஹப்புதென்ன, ஹல்தும்முல்ல, 1வது பதிப்பு, நவம்பர் 2022. (சென்னை 600 117: ஸ்ரீதுர்கா பிரின்டர்ஸ், 4ஏ, பூபதி நகர், கீழ்க்கட்டளை).

xxii, 232 பக்கம், விலை: ரூபா 1000., இந்திய ரூபா 260., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-624-6336-00-4.

தி.ஞானசேகரனின் ‘எரிமலை” நாவல் எந்தளவு தூரம் இலங்கையின் இன மோதல் வரலாற்றின் அடிப்படைகளை எடுத்துரைக்கிறது என்பதை ஆராய்வதே இந்நூலின் நோக்கமாகும். கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் தமிழ்ப் பட்டயக் கற்கை நெறியினைப் பூர்த்தி செய்வதன் பொருட்டு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையின் திருத்தி வடிவம் இதுவாகும். இவ்வாய்வு, தோற்றுவாய், நாவலிலக்கியமும் ஈழத்துத் தமிழ் நாவல்களும்: பொதுவான எண்ணக்கருக்கள், ஈழத்தில் இனமோதுகையின் வரலாற்றுப் பின்புலம், ஈழத்துத் தமிழ் அரசியல் நாவல்களின் தோற்றமும் வளர்ச்சியும், எரிமலை நாவலில் வெளிப்படும் இன மோதல் பற்றிய அரசியற் பிரச்சினைகள், எரிமலை எடுத்துரைக்கும் அரசியற் தீர்வு பற்றிய விவாதங்கள், எரிமலை நாவலின் புனைகதைத் திறன், நிறைவுரை ஆகிய எட்டு இயல்களைக் கொண்டமைந்துள்ளது. பின்னிணைப்பில் இனமோதுகையை அடிப்படையாகக் கொண்டெழுந்த ஈழத்துத் தமிழ் அரசியல் நாவல்கள் சிலவற்றின் பட்டியல் ஒன்றும் தரப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Plinko Bgaming, Info Meci, Dacă De Joci

Content Casino Online Germania – Slot Adventure palace Termenii Și Condițiile Cazinoului Selecţionare Playboy Fortunes Online Și Grati Sloturile Online Puteți amenţine toate cele 5

14308 இலங்கை மத்திய வங்கி: அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள் ; 2005இன் முக்கிய பண்புகளும் 2006இற்கான வாய்ப்புகளும்.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, இல. 30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 2005. (கொழும்பு: லேசர் கிராப்பிக் லிமிட்டெட்). (6), 77 பக்கம்,

Officiële webpagina Toeslag va 300, 20 Spins

Inhoud $ 5 storting casino boom brothers – Wh spelen bij Unique Gokhuis Industriële bakkerijen Gebruiksvriendelijkheid gedurende Unique Bank casino verzekeringspremie inval online gokhuis 2022