ஐயாத்துரை சாந்தன். சென்னை 600011: இருவாட்சி வெளியீடு, (இலக்கியத் துறைமுகம்), 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், 1வது பதிப்பு, செப்டெம்பர்; 2007. (சென்னை 600 005: எம்.கே.என்டர்பிரைஸஸ்).
144 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 70.00, அளவு: 21.5×14.5 சமீ.
2003இல் கென்யப் பயணமொன்றினை மேற்கொண்டு சாந்தன் ஆபிரிக்கப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். அப்பயண அனுபவங்களை சுவையாக “வெள்ளிநாதம்” இதழ்களில் 29 அத்தியாயங்களில் ஒரு பயணத் தொடராக வெளியிட்டுவந்தார். அத்தொடரின் நூலுரு இதுவாகும். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34555).