ஈ.கே.இராஜகோபால் (ஆசிரியர்). லண்டன் : புதினம் வெளியீட்டாளர்கள், 38, Moffat Road, London SW17 7EZ, 1வது பதிப்பு 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).
184 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×19 சமீ.
இலண்டனிலிருந்து 20 ஆண்டுகளாக (1996-2016) தொடர்ந்து “புதினம்” இதழ் வெளிவருவதைக் குறிக்கும் முகமாக 29.10.2016 அன்று லண்டனில் (Richard Challoner, Menor Drive North, New Malden, Surrey KT3 5PE) நடந்தேறிய புதினம் 20ஆவது ஆண்டு விழாவில் வெளியிடப்பட்ட சிறப்பிதழ் இதுவாகும். இம்மலரில் நினைவுகளின் பாதையில் (ஈ.கே.இராஜகோபால்), புலம்பெயர் தமிழரின் ஊடகத் தமிழ்நெறி (எஸ்.திருச்செல்வம்), புதினத்தோடு பதினெட்டு ஆண்டுகள் (சிவ. தியாகராஜா), விண் மட்டும் தெய்வமன்று (இ.ஜெயராஜ்), உலகத் தலைநகரில் புதினம் (பொன்.பாலசுந்தரம்), வரலாற்றில் அழிக்கமுடியாத பக்கங்கள் (இரத்தினம் கந்தசாமி), தனி மனிதனின் உழைப்பின் வெளிப்பாடு (நாக சிறீகெங்காதரன்), ஈழகேசரி ராஜகோபாலும் நானும் (மாத்தளை சோமு), துள்ளித்திரிந்த இளமைக் காலம் (விமல் சொக்கநாதன்), ராஜகோபால் ஒரு தொடர்கதை (நவஜோதி யோகரட்ணம்), ஒரு சாதனையாளர்: புதினமும் மனிதமும் (கல்லாறு சதீஷ்), லண்டனில் விநாயக மிஷன்ஸ் புகழ்பாடும் புதினம் (ஏ.எஸ்.கணேசன் வேந்தன்), நெஞ்சை நெகிழவைக்கும் புதினம் நினைவுகள் (லண்டன் பாபா), புதினத்தில் ஒரு புதுமை (பொ.சண்முகநாதன்), மொட்டு விரியும் இதயம் மலரும் (இணுவை ச.சிறிரங்கன்), அறிஞர்களின் வித்துக்களை விருட்சமாக்கும் பூமி புதினம் (சிவதணிகாசலம்), மண்ணை நேசிப்பவர் (எஸ் வேலாயுதம்), புதினம் ஒரு வரப்பிரசாதம் (எஸ்.நவரத்தினம்), நினைவில் நிற்கும் நிஜங்கள் (சரோஜினி சந்திரகோபால்), அந்நிய நாடுகளில் பத்திரிகைத்துறை (ஏ.ஜே.ஞானேந்திரன்), தமிழ் சினிமா நகைச்சுவை வரலாறு (மோகன் வி.ராமன்), தாயெனும் கோயில் (எஸ்.பத்மநாதன்), புரிதலும் புதினமும் (என்.சிவானந்தசோதி), நம்பமுடியவில்லை (கந்தசாமி மனோகரன்), மனித நேயமுள்ள பத்திரிகையாளர் (வவுனியூர் இரா. உதயணன்), புதினத்தில் என் சங்கதி (ப.வை.ஜெயபாலன்), தமிழ் சிறுவர் இலக்கிய வளர்ச்சி (குரு அரவிந்தன்), மனம் பேசுகிறது (வண்ணை தெய்வம்), பயணங்கள் முடிவதில்லை (லண்டன் ராஜாத்தி), குருவாக வந்தவர் (ஆர். தியாகராஜன்), ஊடகவியலாளர் ராஜகோபால் (செல்லத்தம்பி சிறீக்கந்தராஜா), தாய் -பரிசுக்கதை (கே.ஆர். டேவிட்), எழுத வைத்து உற்சாகப்படுத்தியவர் (உடுவை தில்லை நடராஜா), எங்கள் அண்ணா (பவானி இரவீந்திரன்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.