16868 ஈழத்தின் புகழ்பூத்த பூசுரர்கள்: தமிழரசர் காலம் முதல் கி.பி. 2020 வரை.

ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், ஸ்ரீ நகரம், அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2022. (சுன்னாகம்: கஜானந்த பிரின்டர்ஸ், மானிப்பாய் வீதி, இணுவில்).

xxviii, 276 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 1500., அளவு: 26.5×18.5 சமீ.

தமிழரசர் காலம் முதல் 2020 வரை வாழ்ந்து மறைந்த ஈழத்து அந்தணப் பெரியார்களின் வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பு இதுவாகும். 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போசராச பண்டிதரிலிருந்து 2010இல் லண்டனில் மறைந்த சா.சுந்தரேசக் குருக்கள் வரையிலான 176 பெரியார்கள் பற்றி இந்நூல் விரிவான தகவல்களைத் தருகின்றது. புத்தூர் ஆவரங்கால் சிவசக்தி மணிமண்டப உரிமையாளர் திரு.சிவசுந்தரம், லண்டன் குரொய்டன் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய குருக்கள் சிவஸ்ரீ சிவ.கோகுலநாதக் குருக்கள் (கோபி சிவம்) ஆகிய இருவரும் இந்நூல் வெளியீட்டுக்கான அனுசரணையை ஆசிரியருக்கு வழங்கியுள்ளனர்.

ஏனைய பதிவுகள்