16884 நாத்து.

சுபா குருபரன் (இயற்பெயர்: சுபாஷினி குருபரநாதன்). பிரான்ஸ்: சுபாஷினி குருபரநாதன், பாரிஸ், 1வது பதிப்பு, 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை).

164 பக்கம், புகைப்படங்கள், விலை: 9 இயூரோ, அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-10-699-9488-1.

“நாத்து என்னும் இப்பதிவு தனியே என் சுயசரிதையோ, வரலாற்றுப் பதிவோ, அரசியல் ஆய்வோ அல்ல. எல்லாம் ஒன்றடங்கிய ஒரு தொகுப்பு. பன்னிரண்டு வயதில் நான் பிரான்ஸ் நாட்டிற்கு வந்தது முதல் இன்றுவரை நான் கடந்து வந்த பாதைகளையும் பட்ட அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள முயல்கிறேன். அத்துடன் என் பாதையில் நான் சந்தித்த பலதரப்பட்ட மக்கள் பற்றியும் குறிப்பாக எனது தாய்மண்ணான ஈழத்தில் இருந்து அகதிகளாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகள் பற்றியும், அவர்களுடன் நான் பல வருடங்களாக இணைந்து புரிந்த சமூகப் பணிகள் பற்றியும் மீட்டுப்பார்க்கிறேன். எமது இளைய தலைமுறையினரும் படித்து அறிந்து கொள்ளவேண்டும் என்ற காரணத்தாலும், அவர்களுக்கு நிச்சயம் எங்கள் வாழ்வியலைத் தெரியப்படுத்த வேண்டும் என்ற கடமை உணர்வாலும், பிரஞ்சு, ஆங்கில மொழிகளிலும் இந்நூல் வெளிவருகின்றது. இது எனது முதல் நூல். கன்னி முயற்சி.” (நூலாசிரியர் என்னுரையில்)

ஏனைய பதிவுகள்

12928 – கல்வி ஊற்றுக் கண்களில் ஒன்று.

ஏ.இக்பால். பேருவளை: பேசும் பேனா பேரணி, 63, பள்ளிவாசல் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1994. (பேருவளை: குவிக் கிராப்பிக் பிரின்ட், 26/6, பள்ளிவாசல் வீதி). 111 பக்கம், விலை: ரூபா 55., அளவு:

12847 – புனைவுகள், நினைவுகள், நிஜங்கள்: ஒரு ஆய்வுநிலைத் தொகுப்பு.

செல்வி திருச்சந்திரன். கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58 தர்மராம வீதி, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xii, 134 பக்கம்,