16901 நாவலர் மாநாடு விழா மலர் 1969.

மலர் ஆலோசனைக் குழு. கொழும்பு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை, 1வது பதிப்பு, 1969. (கொழும்பு: மெய்கண்டான் அச்சகம் லிமிட்டெட், 161, செட்டியார் தெரு).(28), 367 பக்கம், தகடுகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×19.5 சமீ.

வாழ்த்துக் கவிதைகள், முன்னுரை (ஆறுமுக நாவலர் சபை), ஆசியுரை என்பனவற்றுடன் நாவலரும் புராண படனமும் (பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை), ஞானஞாயிறு நாவலர் பெருமான் (ச.தண்டபாணி தேசிகர்), தற்கால உரைநடையின் தந்தை (பேராசிரியர் வி.செல்வநாயகம்), நாவலர் வகுத்த புதுப்பாதை (கலாநிதி க.கைலாசபதி), தமிழ் இலக்கியத்துக்கு நாவலர் புரிந்தபணி (கலாநிதி பொ.பூலோலசிங்கம்), நாவலரும் தமிழ்மொழியும் (வித்துவான் சொ.சிங்காரவேலன்), நாவலரும் நற்றமிழும் (பேராசிரியர் சி.நயினார் முகமது), நாவலர் பெருமை (பண்டிதர் இ.நமசிவாய தேசிகர்), நாவலர் புகழை நானோ சொல்லவல்லேன் (திரு.க.சரவணமுத்துப்பிள்ளை), ஆறுமுக நாவல சற்குரு (திரு.ம.க.வேற்பிள்ளைப் புலவர்), அச்சகமும் பதிப்பீடும் (நாரா நாச்சியப்பன்), தமிழகத்தை ஈழநாட்டுக்குக் கடமைப்படுத்திய பேருபகாரி (எஸ்.சோமசுந்தர பாரதி), நாவலர் கல்விப் பணி (ச.அம்பிகைபாகன்), நாம் நாவலருக்குச் செய்யும் கைம்மாறுகள் (சுத்தானந்த பாரதியார்), கல்வித் துறையில் தீர்க்க தரீசனம் (கி.லக்ஷ்மணன்), நாவலர் சைவக் காவலர் (கவியோகி சுத்தானந்த பாரதியார்), உசாத் துணை (அ.வி.ம.), நாவலரும் பதிப்பாசிரியப் பண்பும் (வித்துவான் டாலூர் கண்ணப்ப முதலியார்), தமிழ் உரைநடையின் தந்தை (சோமலெ), பத்திரிகையில் நாவலரின் எழுத்து நடை (க.சதாமகேசன்), ஏற்ற வழிகாட்டி (தி.செல்வக்கேசவராய முதலியார்), நாவலரது இலக்கணப் பணி (செ.வேலாயுதபிள்ளை), மறைவளர்த்த நாவலரும் முஸ்லிம் நேசன் ஆசிரியரும் (எஸ்.எம்.கமாலுத்தீன்), நாவலர் காலம் (ச.தனஞ்சயராசசிங்கம்), ஆறுமுக நாவலரின் ஆளுமை (செவ்வேள்), ஒப்புயர்வில்லா நாவலன் (கு.அம்பலவாணபிள்ளை), தமிழிலே குறியீட்டிலக்கணம் புகுத்தியவர் (வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார்), தமிழ் செய்த தவம் (பண்டிதர் வி.சீ.கந்தையா), கந்த புராணங் காக்கும் கலாசாரம் (பண்டிதை த.வேதநாயகி), நாவலர் எழுப்பும் முதல் வினா (செ.தனபாலசிங்கன்), நாங்களும் மெச்சுகின்றோம் (நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்), நாவலருக்கு என்ன தெரியும்? (குல.சபாநாதன்), நாவலர் பெருமான் (சம்பந்தன்), நாவலர் வழிவந்த சமுதாயம் (வித்துவான் பொன்.முத்துக்குமாரன்), நாவலரும் முஸ்லிம்களும் (மு.முகம்மது உவைஸ்), தமிழிலக்கண அறிவு பரவுவதற்கு உதவியவர் நாவலர் பெருமானே (மறைமலை அடிகள்), தமிழகத்தை ஈழ நாட்டுக்குக் கடமைப்படுத்திய பேருபகாரி நாவலர் (கலாநிதி. சு.வித்தியானந்தன்), நாவலரும் மதிப்பும் பணியும் (தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை), அச்சாளர் ஆறுமுக நாவலர் (நா.இரத்தினசபாபதி), Arumuga Navalar (Dr.H.W.TAMBIAH), Pioneering HERO (A.M.A.AZEEZ), Prince of Tamil Scholars (C.S.NAVARATNAM), திருநின்ற செம்மையே செம்மை (புலவர் பாண்டியனார்), தமிழர் தவப்பயன் (புலவர் மு.நல்லதம்பி), சிவநெறி (திருமுருக கிருபானந்த வாரியார்), அகப்பொருளில் அருட்பொருள் (முருகவேள்), நாவலர் காலத்து புலவர்கள் (வித்துவான் க.கி.நடராஜன்), வசன நடை கைவந்த வல்லாளர் (எம்.ஆர்.அடைக்கலசாமி), நாவலருக்குப் பின் ஈழத்து உரையாசிரியர்கள் (கு.பூரணானந்தா), மனிதாபிமான மாண்பாளர்கள் (சாலை இளந்திரையன்), மாதோட்டம் (மகேஸ்வரி மகாதேவா), ஈழமும் சிதம்பரமும் (அருள்.தியாகராசா), முந்தியும் இருந்த சிந்துகள் (முருகையன்), ஈழத்தில் தமிழ் நாடகங்கள் (கலையரசு. க.சொர்ணலிங்கம்), தமிழில் விஞ்ஞானமும் இலங்கை நாட்டின் பணியும் (பெ.நா.அப்புஸ்வாமி), Bharata Natyam and Ceylon (S.Sivanayagam) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. கவிதைப் பகுதியில் நல்லூர் ஆறுமுக நாவலனார் (விபுலானந்த அடிகள்), நாவலன் சீரடிகள் வாழி (நவாலியூர் திரு.க.சோமசுந்தரப்புலவர்), நாவலர் தாள் இறைஞ்சுதும் (பண்டிதர் கா.பொ.இரத்தினம்), கனிதமிழ் ஈழத்தோங்கக் கலங்கரை விளக்கம் ஆனோன் (தான்தோன்றிக் கவிராயர்) ஆகிய கவிதைகள் இடம்பெற்றுள்;ளன. தொடர்ந்து, நாவலர் வாழ்க்கைத் திகதிகள், ஆறுமுக நாவலரின் வரலாற்றுடன் தொடர்புடையோர், நாவலர் காலத்தில் வாழ்ந்த பெரியோர்கள், நாவலர் காலத்தில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க சம்பவங்கள் சில, ஆசிரியர் மாணாக்கர் பரம்பரை -1: கூழங்கைத்தம்பிரான் (? – 1795), ஆசிரியர் மாணாக்கர் பரம்பரை -2: நல்லூர் மனப்புலி முதலியார் மகன் சரவணமுத்துப் புலவர் (1802 – 1845), ஆசிரியர் மாணாக்கர் பரம்பரை -3: நல்லூர் க.ஆறுமுக நாவலர் (1822 – 1879), நாவலர் நூல்கள், நாவலரைப் பற்றிய நூல்கள் ஆகிய அவணக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. மலர்க் குழுவில் கி.லட்சுமணன் தலைவராகவும், நா.சோமகாந்தன் அமைப்பாளராகவும், புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை, செ.வேலாயுதபிள்ளை, முதலியார் குல சபாநாதன், க.செ.நடராசா ஆகியோர் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 8789).

ஏனைய பதிவுகள்

Sie bekommen 50 Freispiele abzüglich Einzahlung unter anderem beherrschen damit dahinter dem festen Absoluter wert Drehungen initiieren. Parece ist und bleibt somit alternativ wanneer bei dem Runde qua dieser Demoversion, inside das Gewinne jedoch erdacht eingesammelt werden. In kostenlosen Drehungen vorbeigehen Sie echtes Piepen, das jedoch bei das jeweiligen Spielothek vorrangig gesponsert wird.

Burning Hot gratis vortragen abzüglich Eintragung Content Pyramid Slot Free Spins: So Findet Sera Dies Erzielbar Spielsaal Unter einsatz von Traktandum Spielautomaten Burning Hot –

Best Angeschlossen Casinos

Content How To Cash Veraltet Winnings Altes testament The Best Casino Angeschlossen Highest Paying Natürlich Money Casinos Falls Die leser sich pro einen der Ernährer