16914 தவமலர்கள் : கலைஞர் குழந்தை செபமாலை றோஸ்மேரி தம்பதிகளின் பொன்விழா மலர்.

மலர்க் குழு. மன்னார்: முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றம், முருங்கன், 1வது பதிப்பு, 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).

46 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.

குழந்தை செபமாலை, கலையுலகில் மிக நீண்ட காலமாக பேசப்படுகின்ற ஓர் உயர்ந்த கலைப் படைப்பாளி. இவர் 1940ஆம் ஆண்டு பங்குனி 08ஆம் திகதி முருங்கனில் பிறந்தவர். 1958, 1959 ஆகிய ஆண்டுகளில் கொழும்புத்துறை புனித சூசையப்பர் ஆசிரியர் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியராகப் பயிற்சி பெற்றவர். அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் ஆசிரியராக முதல் நியமனம் பெற்றார். தொடர்ந்து மன்னார்/அடம்பன், கண்டி, மன்னார்/பொன்தீவு கண்டல், மன்னார்/அரிப்பு, மன்னார்/ முருங்கன், மன்னார் இசைமாலைத்தாழ்வு, மன்னார்/ பெரியமுறிப்பு, மன்னார்/கற்கடந்தகுளம் ஆகிய கடினப் பிரதேசங்களில் ஆசிரியப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் ரோஸ்மேரி என்பவரை 1963 ஆவணி 17ஆம் நாள் திருமணம் செய்தார். தம்பதியர் இணைந்து தமது பொன்விழாவை 2013இல் கண்ட வேளையில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இதுவாகும். மலர்க் குழுவில் திரு.ப.சந்தியோகு (அதிபர், மன்னார்/ முருங்கன் மகா வித்தியாலயம்), அருள்திரு பா.கிறிஸ்து நேசரட்ணம் (தமிழ்நேசன் அடிகள், “மன்னா” ஆசிரியர்), அருள்திரு செபமாலை அன்புராசா, அ.ம.தி. (அதிபர், புனித வளனார் குருமடம், கொழும்புத்துறை) ஆகிய மூவரும் இடம்பெற்றிருக்கின்றனர்.

ஏனைய பதிவுகள்

15578 பூவொன்றின் புதிய மொழி.

ரா.கீர்த்தனா. யாழ்ப்பாணம்: அகிலம் வெளியீடு, திருநெல்வேலி கிழக்கு, 1வது பதிப்பு, 2012. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரின்டர்ஸ், 103, பலாலி வீதி). (78) பக்கம், விலை: ரூபா 250., அளவு: 23×14.5 சமீ. அன்புள்ள அம்மாவுக்கு,